HOME ARTICLES HISTORY MARTYRS PHOTOS LINKS ARCHIVES CONTACT  

 

 

  ARCHIVES       March 2009


வன்னிப் பிரதேசத்திலிருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கக் கோரி யாழில் இடம்பெற்ற பேரணி (படங்கள்)

 

யாழ் மாவட்டத்தில் சுதந்திர தினம் 2009 (படங்கள்)


 

15-03-2009, 03.21PM

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் 14 பேர் காயம்.
 

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பி வந்த சிவிலியன்கள் மீது புலிகள் மேலும் ஒரு தாக்குதலினை மேற்கொண்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 14 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் ஒருவர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான அங்கத்தவர் சுதர்சினி தர்மலா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக மையம் குறிப்பிட்டுள்ளது.
 

மேலும் நேற்றயதினம் (14.03.2009) 592 பேர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பி இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியான புதுக்குடியிருப்பு பகுதிக்குள் வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

15-03-2009, 03.14PM

450 நோயாளர்கள் திருமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 


 

முல்லைத்தீவின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் 450 நோயாளர்கள் திருகோணமலைக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

 


 

இவர்களுக்கு இன்று முதல் இந்திய அரசாங்கத்தினால் புல்மோட்டையில் அமைக்கப்;பட்டுள்ள வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படும் என்றும் இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பதவிய வைத்தியசாலைக்கு மாற்றப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

இதற்காக பதவிய வைத்தியசாலையில் 500 கட்டில்களைக் கொண்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பி;ட்டுள்ளார். இனிவரும் காலங்களிலும் முல்லைத்தீவிலிருந்து அழைத்துவரப்படும் நோயாளர்கள் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர் என அவர் மேலும் கூறியுள்ளார்.

 

15-03-2009, 01.43PM

அரசியல் அமைப்புச்சபையை அமைக்க அரசு தாமதம் காட்டினால் அடுத்த கட்ட நடவடிக்கை - ப.உ கஜந்த கருணாதிலக
 

அரசியல் அமைப்புச்சபை மற்றும் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதில் மேலும் தாமதம் ஏற்படுத்தப்படுமானால் அரசியல் கட்சி என்ற ரீதியில் அடுத்த கட்ட நடவடிக்கையினை எடுக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
 

17வது அரசியல் சீர்திருத்தத்திற்கு அரசியல் அமைப்புச்சபை சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதன் அவசியம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். மேலும் தாமதம் ஏற்படும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியகுழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராயும் என அவர் குறுpப்பிட்டுள்ளார்.

 

15-03-2009, 01.36PM

89 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்துள்ளனர்.
 

அரச கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து நேற்றயதினமும் (14.03.2009) 48 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார். ஓமந்தைப் பகுதி இராணுவத்திடம் தஞ்சமடைந்துள்ள இவர்களை நலன்புர்p முகாங்களில் பாதுகாப்பாக தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 

 

15-03-2009, 01.24PM

யாழ் தென்மராட்சியில் மேலும் 4 நல்புரி நிலையகள் அமைப்பு.
 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களை தங்க வைப்பதற்காக யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் மேலும் 4 நலன்புரி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
 

மிருசுவில் றோமன்கத்தோலிக்க வித்தியாலயத்தில் ஆயிரத்து 315 பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கொடிகாமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 706 பொதுமக்களும் தங்கியுள்ளனர். இந்த இரு முகாங்களிலும் தங்கியுள்ள மாணவர்கள் கல்வி நடவடிக்கை தொடர யுனிசெவ் நிறுவனம் உதவ முன்வந்திருப்பதாக தெரிகிறது.
 

இதேவேளை கல்லடி பகுதியில் இரு நலன்புர்p நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு தங்கியுள்ள மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கையினைத் தொடர்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

15-03-2009, 12.48PM

பொகவந்தலாவை தோட்டக் குடியிருப்பில் தீ விபத்து.
 

பொகவந்தலாவை மேற்பிரிவு பத்தாம் இலக்க தோட்டக் குடியிருப்பில் நேற்றும் (14.03.2009) கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத்திற்குட்பட்ட வெளிங்டன் பிரிவில் நேற்று முன்தினமும் இடம்பெற்ற தீ விபத்தில் 15 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் இதனால் 42 பேர் நிர்கதியான நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


 

பொகவந்தலாவை 10ம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் நிர்க்கதியாகியுள்ளதாகவும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தோட்டக் குடியிருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களும் எரிவடைந்துள்ளதாகவும் தோட்டமக்கள் ஒன்றிணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக தெரியவருகின்றது.
 

இதேவேளை கொட்டக்கலை யுலிபீல்ட் தோட்டத்திற்குப்பட்ட வெலிங்டன் பிரிவில் தோட்டக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனால் 3 குடும்பங்களைச் சேர்ந்த பன்னிரெண்டு பேர் நிர்க்கதியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

15-03-2009, 12.37PM

சிவிலியன்களை புலிகள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றனர் - ரஜீவ விஜயசிங்
 

பொதுமக்களை வெளியேற விடாது புலிகள் அமைப்பு மனிதக் கேடயங்களாக அவர்களை பயன்படுத்துகின்றனர் என மனித உரிமைகள் விவகார அமைச்சின் செயலர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
 

ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸ்லின் இடம்பெயர்ந்தோர். தொடர்பான கூட்டத்தில் இலங்கை சார்;பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி இடம்பெயர்ந்தோர் தொடர்பான சுதந்திரமான நடமாட்டம் தொடர்பில் கவலை வெளியி;ட்டுள்ளார். ஆனால் பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் தன்மை மற்றும் இவ்விடயத்தில் சில பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும் ஆரம்பத்தில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாமில் காணப்பட்ட குறைப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியது இடம்பெயர்ந்த மக்களுக்கு சிறந்த சூழலை ஏற்படுத்துவதற்கு தற்போது உறுதிபூண்டுள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.

 

15-03-2009, 12.24PM

மக்களை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் முழு முயற்ச்சி மேற்கொள்ள வேண்டும் - லியாம் பொக்ஸ்
 

கொழும்பில் நேற்றயதினம் (14.03.2009) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் நிழல்வெளிவிகார அமைச்சருமான கலாநிதி லியாம் பொக்ஸ் யுத்தத்தில் இராணுவத்தினர் வெற்றியினைப் பெற்றிருந்தாலும் அரசியல் தீர்வொன்று அவசியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

நாட்டின் பிரச்சினையைத் தீர்;ப்பதற்காக காணப்படும் அரசியல் தீர்வு அனைத்துப் பிரஜைகளும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இன பாகுபாடற்ற வகையில் பங்களிப்பை வழங்குவதற்கு வழியமைக்கும் எனத் தெரிவித்துள்ளார். வடக்கில் அரசியல் சூழலில் இயன்றவரை விரைவாக இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அனைத்து முயற்ச்சிகளையும் மேற்கொள்வது அவசியமானது எனத் தெரிவித்துள்ள அவர் முன்கூட்டியே நடாத்தப்படும் தேர்தல்கள் முறையாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அப்பகுதியிலுள்ள தமிழ் மக்கள் ஜனநாயக அரசியலுக்குள் ஒன்றிணைக்கப்படுவதற்கு அது முக்கியமானதாக அமையும் இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது பங்களிப்பினை வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார். மோதல் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பாக உரிய கவனம் உடனடியாக செலுத்தப்படவேண்டும் மக்கள் வெளியேறாவிட்டால் மனிதக் கேடயங்களாக பயப்படுத்தப்படும் அப்பாவிப் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வது அவசியமானது இது தொடர்பில் தாம் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடனும் கலந்துரையாடியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

15-03-2009, 10.36AM

மக்களுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க இரு தரப்பும் முயலவேண்டும் - வோல்டர் கெலின்
 

அப்பாவிப் பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புக்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என புலிகளையும் அரசாங்கத்தினையும் தாம் கோருவதாக மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா நிபுணர் வோல்டர் கெலின் தெரிவித்துள்ளார்.
 

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளுக்கான விசேட பிரதி வோல்டர் கெலின் ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸ்லில் நேற்று (14.03.2009) இடம்பெற்ற கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்
 

இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கு அரசாங்கம் அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் அம்மக்களை முகாங்களுக்கு கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

15-03-2009, 10.19AM

பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்தினுள் உயிரிழப்புக்கள் இடம்பெறுவது தொடர்பில் அமெரிக்கா கவலை
 

ஜனாதிபதி மகிந்தராஜப்ஷவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் வடக்கில் யுத்தம் நடைபெறும் பகுதியில் அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் இடம்பெறும் உயிரிழப்புக்கள் தொடர்பில் தாம் ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளார் என ஏ.எவ்.பி செய்திச்சேவை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல்களை நடாத்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
 

மனிதாபிமான பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நலனைக் கவனிக்க அனைத்து உதவிகளையும் அனுமதியினையும் அரசாங்கம் வழங்க வேண்டும் சர்வதேச மனிதாபிமான நிவாரண அமைப்புக்களை யுத்தப் பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள முகாங்களுக்கும் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் பொதுமக்கள் மீது புலிகள் மேற்கொள்ளும் மிலேச்சத்தனமான தாக்குதலினை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர் அரசியல் தீர்வொன்றினை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

15-03-2009, 10.16AM

புதுமாத்தளன் வைத்தியசாலையின் பணிகளும் நிறுத்தம்.
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிய புதுமாத்தளன் வைத்தியசாலையின் செயற்பாடுகளும் நேற்றுடன் (14.03.2009) நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் வரதராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மாகாண வைத்திய சேவைகள் அத்தியட்சகர் டாக்டர் ஞானசோதிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

வெளிநோயாளர் பிரிவில் வழங்குவதற்கு மருந்துகள் இல்லை அப்பிரிவு ஏற்கனவே செயலிழந்துள்ளத. காயங்களுக்கு கட்டுப்போடுவதற்கு மருந்துகளோ பண்டேஜ் துணிகளோ இல்லை இப்பொழுது சத்திரசிகிச்சை செய்ய போதிய வைத்திய உபகரணங்களோ மருந்துகளோ இல்லை ஒரு துண்டு பஞ்சு கூட வைத்தியசாலையில் இல்லை இதனால் அதன் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிய ஒரே ஒரு வைத்தியசாலை இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

15-03-2009, 10.12AM

இராணுவ வெற்றிக்கு விலையாக மக்களின் உயிர் பலியாகின்றது - ஐ.நாவின் மனித உரிமஉயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை
 

புலிகளுடனான மோதலில் அரச படைகள் வெற்றிகளை குவித்துவருகின்றபோதும் அதற்கு விலையாக பொதுமக்களின் உயிர்கள் பலியாவதாக ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆகியவற்றை மீறும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தையும் விடுதலைப் புலிகளையும் குற்றஞ்சாட்ட வேண்டியுள்ளது. இரு தரப்பினரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை ஆபத்திற்குள்ளாகியுள்ளது. உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும். வடக்குப் பகுதியில் இடம்பெறும் யுத்தத்தினால் பலியாகும் மக்களினதும் காயமடையும் மக்களினதும் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றது. இதனைக் கண்டு தாம் பீதியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

இதேவேளை வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள ஜெனீவா அறிக்கை நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்தசமரசிங்க தெரிவித்துள்ளார்.
 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றயதினம் (14.03.2009) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் ஜெனீவா அறிக்கையில் நவநீதம்பிள்ளை ஜனவரி 20ம் திகதிக்குப் பின்னர் 2 ஆயிரத்து 800 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும் 7 ஆயிரத்திற்கு அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஏனெனில் இவை நம்பிக்கையற்ற தகவல் திரட்டும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணிக்கை எனத் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு ஆதரவானவர்களின் கருத்துக்களை முன்வைத்து அறிக்கையினை வெளியிட்டுள்ளார் என குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் இது ஒரு தலைப்பட்சமான முடிவு என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் எம்முடன் கலந்துரையாடியிருக்கலாம் அதனை விடுத்து தன்னிச்சையாக வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேசத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். புலிகள் சிறுவர்களை படையணியில் இணைக்கின்றனர் என யுனிசெப் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த ஜெனீவா அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாததொன்று எனத் தெரிவித்துள்ளார்.

 

14-03-2009, 05.31PM

நாட்டை பிரிக்க முற்படும் சக்திகளை ஜேவிபி தோற்கடிக்கும்
 

கடவத்தப் பகுதியில் நேற்றயதினம் (13.03.2009) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டுள்ள ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மக்கள் முன்வைக்கும் பிரச்சினைக்களுக்கு தாம் முன்வந்து நடவடிக்கை எடுக்கத் தயாராகவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
 

நாட்டைப் பிரிக்க முற்படும் சக்திகளை ஜேவியினால் தோற்கடிக்க முடியும் எனக் குறிப்பி;ட்ட அவர் அதற்கு மக்கள் அனைவரும் ஜேவிபியுடன் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

14-03-2009, 05.24PM

37 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்துள்ளனர்.
 

அரச கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து 19 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் நேற்றயதினம் (13.03.2009) அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களில் 10 பேர் ஆண்கள் எனவும், 16 பெண்கள் எனவும் 7 பேர் சிறுவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

14-03-2009, 05.18PM

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ள மாணவர்கள் கல்வி நடவடிக்கையினை தொடர கல்வி அமைச்சு ஏற்பாடு.
 

புலிகளின் பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியான யாழ் குடாநாட்டிற்குள் வந்துள்ள மாணவர்கள் கல்வி நடவடிக்கையினைத் தொடர்வதற்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 

இதன்படி 498 பிள்ளைகளை கொடிகாமம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி கற்பதற்கு உரிய சகல ஏற்பாடுகளையும் தென்மராட்சி கல்வி வலயப் பணிப்பாளர் கு.பிரேமகாந்தன் மேற்கொண்டுள்ளார். இந்த மாணவர்களுக்காக யுனிசெவ் தற்காலிக கொட்டகைகளை அமைத்துக் கொடுத்துள்ளது. இவற்றினை யுனிசெவ் நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி டயன் அம்மையார் பிராந்திய கல்விப் பணிப்பாளர் வே.தி.செல்வரட்ணம் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். மேலும் குறித்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக கரித்தாஸ் நிறுவனம் சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் உலக உணவுத்திட்டம் ஆகியன தளபாட உதவிகளை வழங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

 

14-03-2009, 05.12PM

வவுனியாவில் நடமாடும் வைத்தியசாலை அமைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானம்.
 

வடக்கில் மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கான மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக 1000 கட்டில்களைக் கொண்ட நடமாடும் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
 

வவுனியாவிலுள்ள நலன்புரி முகாங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதும் முல்லைத்தீவிலிருந்து மேலும் அதிகளவான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடையவிருப்பதனால் இதனை அமைக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் இதற்கான நடமாடும் வைத்தியசாலையொன்று இல்லாததன் காரணமாக நடமாடும் வைத்தியசாலையொன்றினை வெளிநாடு ஒன்றிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

14-03-2009, 05.03PM

யாழ் உற்பத்திப்பொருட்கள் கொழும்பை வந்தடைந்தன.
 

யாழ் குடாநாட்டில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களை உள்ளடக்கிய 20 லொறிகள் ஏ9 வீதியூடாக வெலிசறை சதோச களஞ்சியசாலையை வந்தடைந்திருப்பதாக பிரதி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் என்.வி.லியன ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்
இந்த லொறிகளில் மீன் கருவாடு, வெங்காயம் பழவகை உட்பட 400 மெற்றித் தொன் பொருட்கள் வந்தடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளது.

 

14-03-2009, 02.47PM

யாழ் நகரில் கலா நிலையமொன்றினை அமைப்பதற்கு திட்டம்.
 

தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் சகர கலைஞர்களின் பங்களிப்புடன் யாழ் நகரில் கலா நிலையமொன்றினை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இக்கலா நிலையம் திரையரங்கு சனசமூக நிலையம் கலையரங்கு ஒத்திகை மேடை ஆகியவற்றினை உள்ளடக்கியதாக யாழ்ப்பாண கட்டிடக் கலை சிறப்பம்சங்களையும் உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

 

கலா நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் மாநாடும் ஊடகவியலாளர் மாநாடும் கொழும்பில் அமைந்துள்ள திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாச தலைமையில் இடம்பெற்றுள்ளது. வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவினை மேம்படுத்துவதற்காக கலையின் உறவுப்பாலமாக அமையும் இந்நடவடிக்கையில் எந்தவொரு அரசியலும் கலக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

 

14-03-2009, 02.38PM

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ பிரிட்டன் கொஹிர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.லியா பொக்ஸை சந்தித்துள்ளார்.
 

வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவின் அழைப்பையேற்று இலங்கை வந்துள்ள பிரிட்டன் கொஹிர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.லியா பொக்ஸ்ஸை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

 


 

இதன்போது வடபகுதியை முழுமையாக மீட்டு அம்மக்களுக்கு சிறந்த ஜனநாயகத்தினை பெற்றுக்கொடுப்பதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியிலுள்ள கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியமென்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி பயங்கரவாதிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் யாழ் மாநகரசபைத் தேர்தல் உட்பட உள்ளுராட்சிச்சபைத் தேர்தல்கள் அனைத்தும் நடாத்தப்படும் இதன் மூலம் அம்மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

14-03-2009, 02.23PM

மக்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு இராணுவ நடவடிக்கை மந்தகதியில் இடம்பெறுகின்றது -  அபேவர்த்தன
 

புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களை பாதுகாப்பதற்காக பாரிய தாக்குதல்களை படையினர் நிறுத்தி மனிதாபிமான இராணுவ நடவடிக்கையினை மந்தகதியில் முன்னெடுப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
 

இதுவே போர் நிறுத்தமொன்றிற்கு சமனானது என குறிப்பி;ட்டுள்ள அவர் அரசாங்கம் ஒருபோதும் மனிதாபிமானச் சட்டங்களை மீறிச் செயற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக பாதுகாப்பு பாதைகளை நாம் அறிவித்துள்ளோம் அதனூடாக மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவண்ணமுள்ளனர். இந்த நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் கோரிக்கையை நாம் மதிக்கின்றோம். போர் நிறுத்தம் ஒன்றினை அறிவிக்காது போனாலும் நாம் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கை போர் நிறுத்தம் ஒன்றிற்கு சமனானது என அவர் தெரிவித்துள்ளார்.

 

14-03-2009, 12.25PM

இனப்பிரச்சினையை வைத்து இந்தியா அரசியல் நடாத்துகின்றது - தயாசிறி விஜசேகர
 

இலங்கையின் இனப்பிரச்சினையை வைத்து இந்திய அரசியல் நடாத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி விஜசேகர தெரிவித்துள்ளார். இந்தியா தனது உண்மையான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் அதிகாரப் பகிர்வு தொட்ர்பான இந்தியாவின் கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

அதிகாரப் பரவலாக்கத்தினை இலங்கை அரசு மேற்கொள்ள வலியுறுத்துவதாக வாஷிங்டனில் இந்திய வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

அங்கு தொடர்ந்;தும் கருத்து வெளியிட்ட அவர் 1987ம் ஆண்டு இந்தியா விமானம் மூலம் பலவந்தமாக உணவுப் பொதியினைப் போட்டது. அதன் பின்னர் இடைப்பட்ட காலங்களில் பல்வேறு வழிகளில் தலையீடுகளை மேற்கொண்டது. தற்போது இந்தியா புல்மோட்டையில் தளம் இட்டுள்ளது. இங்கு என்ன நடக்கின்றது என்பதனை எம்மால் புரிந்துகொள்ள முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். 13வது அரசியல் திருத்தச்சட்டத்திற்கு அமைய அரசியல் தீர்;வுத்திட்டம் முன்வைக்கப்படும் என அரச கூறுகின்றது. இந்தியாவின் நகர்வைப் பார்த்தால் 13வது அரசியல் அமைப்பினையும் தாண்டிய அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும்போல் தெரிகிறது எனவே அரசாங்கம் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

14-03-2009, 12.20PM

தேசிய வைபவங்களை நடாத்துவதற்கு இரு வாரங்களுக்கு முன் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிபெறவேண்டும்
 

நாட்டின் தேசிய பாதுபாப்பினை உறுதி செய்வதற்காக அரசாங்கம் புதிய பாதுகாப்பு நடைமுறைத்திட்டமொன்றினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அமைய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் தேசிய வைபங்களை நடாத்துவதற்கு இரு வாரங்களின் முன்னரே பாதுகாப்பு அமைச்சின் அனுமதியினை ஏற்பாட்டாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அதன் மூலம் நிகழ்வின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள முடியும் எனவும் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் ஹ_லுக்கல்ல தெரிவித்துள்ளார்.
 

வடக்கில் படையினர் தொடர்ந்தும் முன்னேறிவரும் நிலையில் தோல்வி கண்டுள்ள புலிகள் அமைப்பு தெற்கில் பாரிய தாக்குதல்களை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இன மத பேதமின்றி இன்று அவர்கள் அனைவர் மீதும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்த தயாராகியுள்ளனர். அதற்கு அக்குரஸ்ஸவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் ஒரு முன்னுதாரணமாகும் எனவே அனைத்து மக்களும் மிக விழிப்பாக இருப்பது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

 

14-03-2009, 12.02PM

கம்பம்கோரி கடத்தப்பட்ட 6வயது சிறுமி சடலமாக மீட்பு.
 

திருகோணமலை பாலையூற்று பூம்புகார் பகுதியில் கப்பம் கோரி கடத்தப்பட்ட 6 வயது சிறுமி கண்கள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 


 

கடந்த 11ம் திகதி ஆயுததாரிகளினால் கடத்தப்பட்ட குறித்த சிறுமி நேற்று (13.03.2009) முற்பகல் 11 மணியளவில் உரப்பை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த ஜூட்ரெஜி வர்ஷா (வயது 6) எனும் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலி;ஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார்.

 

13-03-2009, 10.42AM

வாகன நெரிசலைத் தடுப்பதற்கு அரசு விசேட நடவடிக்கை.
 

தலைநகர் கொழும்பு நகரில் வாகன நெரிசலை குறைப்பதற்காக அரசாங்கம் புதிய திட்டமொன்றை அமுல்படுத்தியிருப்பதாக அமைச்சர் டளஸ் அழகுபெரும தெரிவித்துள்ளார். இதற்கு அமைய தமது தனிப்பட்ட வாகனங்களில் கொழும்பு நகருக்குள் வர முயலுவோர் அவற்றினை நகரின் எல்லைப்புறத்தில் நிறுத்திவிட்டு சொகுசு பஸ் வண்டியில் நகருக்குள் பிரவேசிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

இதற்காக விசேட வாகனத் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதல் தரிப்பிடம் காலி வீதியின் அங்குலானையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் டளஸ் அழகுபெரும நேற்றயதினம் (12.03.2009) திறந்து வைத்துள்ளார்.

 

13-03-2009, 10.28AM

வின்டான் கப்பலில் பொருட்களை இறக்கும் பணி நிறைவு.
 

அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்காக வின்டான் கப்பலில் அனுப்பப்பட்ட பொருட்களில் எஞ்சியவையும் தற்போது இறக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை வினியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 

500 மெற்றித்தொன் பொருட்களை ஏற்றிக்கொண்டு முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதிக்கு சென்ற குறித்த கப்பல் பொருட்களை இறக்கிய வேளையில் அதன் மீது புலிகள் பீரங்கித் தாக்குதலினை மேற்கொண்டனர் இதனையடுத்து கப்பல் ஆள்கடலுக்கு கொண்டுசெல்லப்பட்டு நங்கூரமிடப்பட்ட நிலையில் எஞ்சிய பொருட்கள் இறக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 

கடந்த இரு வார காலப் பகுதியினுள் அரச கட்டுப்பாடற்ற பகுதிக்கு 750 மெற்றித் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்தசமரசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு உலக உணவுத்திட்டமும் உதவி வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

13-03-2009, 10.24AM

பிரிட்டன் உயர்ஸ்தானிகர் வவுனியாவிற்கு விஜயம்
 

இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் பீட்டர் பேட்டன் தலைமையிலான குழு ஒன்று நேற்றயதினம் (12.03.2009) வவுனியா செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள நலன்புரி முகாமிற்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

அங்கு சென்ற இக்குழு நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களின் நலன் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வசதிகள் குறித்து அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. இம்மக்களுக்க தரமுயர்ந்த மருத்துவ வசதிகளை அரசாங்கம் வழங்கியிருப்பதாகவும் அத்துடன் சதோச தபால் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

13-03-2009, 10.01AM

ரி.எம்.வி.பி உறுப்பினரின் வீட்டின் மீது கிரனைட் தாக்குதல்.
 

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது கிரனைட் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

குறித்த பகுதியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி ஜெயகிருஷ்ணன் என்பவரின் வீட்டின் மீதே நேற்றயதினம் (12.03.2009) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் வீட்டிற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ள போதும் உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரியவருகின்றது.

 

13-03-2009, 09.50AM

அரசாங்கத்தின் ஆட்சி முழு இலங்கைக்கும் விஸ்தரிக்கப்படும் நாள் வெகு தொலைவிலில்லை - கோட்டபாய ராஜபக்ஷ
 

அரசாங்கத்தின் ஆட்சி முழு இலங்கைக்கும் விஸ்தரிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் மூலம் பொலிஸார் இராணுவத்தினர் என முப்படையினரும் இலங்கையின் எப்பகுதிக்கும் சென்றுவரக்கூடிய பின்னணி உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

புலிப்பயங்கரவாதிகள் 35 சதுர கிலோ மீற்றர் பகுதிக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் எனினும் இப்பகுதியில் கூடுதலானவை கடல்நீர் ஏரியாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். சமாதான காலத்தில் நாட்டின் அதிகளவான பிரதேசம் புலிகளின் வசமிருந்தது எனினும் படையினரின் அர்ப்பணிப்புக் காரணமாக அவை இன்று அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

12-03-2009, 04.35PM

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை இராணுவத்தின் வசம்.
 

 

 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் இன்று (12.03.2009)  வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு தேடுதல்கள் இடம்பெறுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

12-03-2009, 04.27PM

மூன்று புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரண்.
 

புலிகள் அமைப்பிலிருந்து தப்பிய 3 புலி உறுப்பினர்கள் ஓமந்தையிலுள்ள இராணுவத்தினரிடம் சரண் அடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களில் ஒருவர் 21 வயதுடைய பெண் எனவும் இவர்களை வவுனியா நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

12-03-2009, 04.19PM

பேராசிரியர் தம்பிக்க கங்கநாத் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 

ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்ட கொழும்பு கோட்டை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் தம்பிக்க கங்கநாத் திஸ்ஸாநாயக்க இன்று (12.03.2009) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 

நேற்று இரவு கடத்தப்பட்ட இவர் இன்று அதிகாலை விடுதலை செய்யப்பட்டு வீடு வந்து சேர்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

12-03-2009, 04.12PM

வாழைச்சேனை மியான்குளம் பகுதியில் இ.போ.ச பஸ் எரிப்பு.
 

மட்டக்களப்பு வாழைச்சேனை மியான்குளம் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஆயுததாரிகளினால் எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார்.

 


 

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற பஸ்ஸே இன்று (12.03.2009) அதிகாலை 2 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் வைத்து பஸ்ஸை வழிமறித்த ஆயுததாரிகள் அதிலிருந்து பயணிகளை இறங்குமாறு பணிப்புரை விடுத்ததன் பின்னர் எரித்துள்ளனர்.

 

12-03-2009, 03.50PM

கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு.
 

மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை (13.03.2009) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
 

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இடம்பெறும் முதலாவது கூட்டம் இது எனத் தெரிவித்துள்ள செயலகம் இதன்போது தேர்தல் தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தேர்தல்கள் நடைபெறவுள்ள விதம் தொடர்பாக பேசப்படும் எனத் தெரிவித்துள்ளது.

 

12-03-2009, 01.29PM

தாக்குதலில் பாதிக்கப்பட்டோரை அமைச்சர்கள் குழு பார்வை

 

மாத்தற அக்குரஸ்ஸ கொடபிட்டிய குண்டுவெடிப்பில் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களையும் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான றிசாட்பதியுதீன் டளஸ் அழகுபெரும, சந்திரசிறி கஜதீர ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அவர்களுக்கான நஸ்டஈட்டுத் தொகையினையும் வழங்கியுள்ளனர்.

 


 

மாத்தற வைத்தியசாலைக்கு சென்ற அமைசர்கள் குழு காயமடைந்தவர்களுக்கு நஸ்டஈட்டுத் தொகையினை வழங்கியதுடன் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று தமது இறுதி அஞ்சலியினையும் செலுத்தியுள்ளனர். குறிப்பாக சம்பவத்தில் உயிரிழந்த அக்கரஸ்ஸ பிரதேசசபையின் உபதலைவர் உபாலி சரத்சந்திர கம்புறுபிட்டிய பிரதேச சபையின் உபதலைவர் திலக் தம்மிக விஜயசேகர தெவிநுவர பிரதேச சபையின் தலைவர் லின்டன் அபேவீர ஆகியோரினது மரணச்சடங்கில் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஸ அமைச்சர் டளஸ் அழகுபெரும ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


 

இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒன்றிற்கு 50 ஆயிரம் ரூபாவும் காயமடைந்த ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாவும் நஸ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

 

12-03-2009, 12.55PM

பொதுநிகழ்விற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதிபெறவேண்டும்

 

பொதுமக்கள் பங்குபற்றும் பொது வைபவங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிமுக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி கட்டாயம் பெறப்படவேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று முதல் (11.03.2009) இந்த நடைமுறை அமுலுக்கு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

பொதுக்கூட்டங்கள் நடாத்தப்படும் போது அதன் ஏற்பாட்டாளர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்க வேண்டும் எனவும் அதன் மூலம் அந்நிகழ்விற்கான முழுப்பாதுகாப்பினையும் பாதுகாப்பு படையினர் வழங்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டு வரவுள்ள இந்த வேளையில் அதனையொட்டி இடம்பெறும் அனைத்து நிகழ்விற்கும் இந்த முன் அனுமதி பெறப்படவேண்டும் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் குளுகல்ல தெரிவித்துள்ளார்.

 

12-03-2009, 12.41PM

ஐ.தே.க த.தே.கூ ஜேவியி சர்வகட்சிக்குழுவில் இணையத்தவறும் பட்சத்தில் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்படும் - திஸ்ஸவிதாரண
 

சர்வகட்சிக்குழுவின் அழைப்பையேற்று ஐ.தே.க மக்கள் விடுதலை முன்னணி, த.தே.கூ ஆகியன தமது தீர்வுத்திட்டத்தினை முன்வைக்கவேண்டும் அவ்வாறு செய்யாதுவிடின் ஏற்கனவே குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீர்வுத்திட்டத்தினை தயாரித்து ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் கையளிக்கும் என சர்வ கட்சிக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவி;த்துள்ளார்.
 

சர்வகட்சிக்குழுவின் தற்போதய செயற்பாடுகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வகட்சிக்குழு தீர்வுத்திட்டத்தினைத் தயாரிப்பதற்கு இதுவரையில் 107 தடைவைகள் கூடி ஆராய்ந்துள்ளன. இதில் 13 அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்தக் கட்சிகளின் ஒப்புதலுடன் 90 சதவீதமான திட்டங்கள் பூர்த்தியாகியுள்ளன. எஞ்சியுள்ள 10 வீதம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம் அதற்கும் தீர்வு வெகுவிரைவில் காணப்படும் இந்த நிலையில் சர்வகட்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமது தீர்வுத்திட்ட ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு வெளியிலுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துவருகின்றோம். அவை தம்மை இதில் இணைத்துக் கொள்ள தவறும் பட்சத்தில் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 

12-03-2009, 12.35PM

உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் குழு யாழ் விஜயம்.
 

வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அடங்கிய குழுவினர் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்று (11.03.2009) யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.


வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பி.ஜோன்சன் தலைமையில் மூவர் கொண்ட குழுவே குடாநாட்டிற்கு வந்துள்ளது இந்தக்குழு யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து உள்ளுராட்சி அலுவலகங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளனர்.

 

12-03-2009, 12.17PM

இதுவரையில் 40 ஆயிரம் பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருப்பதாக தே.பா.ஊ.தகவல் மையம் தெரிவிப்பு.
 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இதுவரையில் 40 ஆயிரம் பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
 

நேற்றயதினமும் வெற்றிலைக்கேணிப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரிடம் 378 சிவிலியன்கள் தஞ்சமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மையம் இவர்களில் 111 சிறுவர்கள் 131 பெண்கள் 136 ஆண்கள் அடங்குவதாக தெரிவி;த்துள்ளது. இவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டு நலன்புரி முகாங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது.

 

12-03-2009, 09.28AM

உள்விவகாரங்களில் வெளிநாடுகள் மூக்கை நுளைக்கக்கூடாது - ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர்அனுரகுமார திசாநாயக்க
 

வடக்கு முழுமையாக மீட்கப்பட்டதும் அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் இந்த நிலையில் அமெரிக்காவும் இந்தியாவும் எமது நாட்டின் உள்விவகாரங்களில் மூக்கை நுளைக்கக்கூடாது என ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 

இலங்கைக்கு இந்திய மருத்துவர்கள் குழு வந்துள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் உள்ள நட்புறவின் அடிப்படையில் இந்தியா வேண்டுமானால் மருத்துவ உபகரணங்களை அனுப்பியிருக்கலாம் அதனைவிடுத்து இந்திய மருத்துவர்கள் குழு புல்மோட்டையில் தளம் அமைத்துச் செயற்படுவதனை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். இது எமது நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

 

12-03-2009, 09.24AM

மக்களின் இயல்புவாழ்வை சீர் குலைப்பதற்கு புலிகள் முயற்ச்சிக்கின்றனர் - லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன
 

பொதுமக்களின் இயல்புவாழ்க்கையினை சீர் குலைத்து வடக்கில் படையினர் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கையினை திசைதிருப்புவதற்கு புலிகள் முயற்ச்சிப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
 

வடக்கில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்துவரும் புலிகள் இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் மக்களின் இயல்புவாழ்க்கையினை சீர்குலைக்க முற்படுவர் எனவே மக்கள் மிக அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைந்துள்ள தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (11.03.2009) நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் கருத்து வெளியிடும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ஸ்ரீமாவோ போதியில் 1985ம் ஆண்டு மே 11ம் திகதி மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அதேபோன்று புலிகள் மேற்கொண்ட 10வது தாக்குதல் அக்குரஸ்ஷ தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளார். கொடப்பிட்டிய ஜூம்பா பள்ளிவாலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அதிகளவான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது இது இன மத சுதந்திரத்தினை சீர்குலைக்கும் நடவடிக்கை என்றே கருதவேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் எதிர்வரும் காலங்களில் பொதுவைபவங்களின்போது மக்கள் பாதுகாப்பு விரிவினரின் ஆலோசனைகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

12-03-2009, 09.10AM

இந்திய மருத்துவர்கள் குழு புல்மோட்டைக்கு பயணம்.
 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து காயமடைந்த நிலையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவரப்படும் மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட மருத்துவர்கள் குழுவை சுகாதார அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 


 

இந்தச் சந்திப்பின் பின்னர் இவர்கள் அனைவரும் புல்மோல்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இந்திய அரசின் இந்த மருத்துவ உதவியினை இலங்கை வரவேற்றுள்ளதுடன் இந்திய மருத்துவர்குழு கொண்டுவந்த ஒரு தொகுதி பொருட்களை இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் அமைச்சர் நிமல்சிறிபாலடிசில்வாவிடம் கையளித்துள்ளார். இதன் பின்னர் கருத்து வெளியிட்ட அவர் இடம்பெயர்ந்துவரும் மக்களின் அவசர தேவைக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் இந்திய அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

 

 

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக வந்துள்ள இந்திய மருத்துவர்கள் குழு இன்று (12.03.2009) தமது பணிகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புல்மோட்டை பிரதேசத்தில் இலங்கை கனியவள மணல் கூட்டுத்தாபன வளாகத்தில் இந்த வைத்திய நடவடிக்கையினை அவர்கள் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பணியில் இந்தியாவிலிருந்து வந்த 57 மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 

11-03-2009, 02.27PM

அச்சுவேலியில் தொழில்நுட்ப கல்வி பூங்கா அமையவுள்ளது.
 

குடநாட்டில் உள்ள படித்த மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அச்சுவேலியில் விவசாய தொழில்நுட்பவியல் பீடம் மீன்வளத் தொழில்நுட்பவியல் பீடம் ஆகியன இணைந்து தொழில்நுட்பக் கல்விப் பூங்கா ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிகிறது. வாழ்க்கைத் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் பியசேன கமகேயின் ஆலோசனைக்கு அமைய இந்த பூங்காவினை அமைக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
 

தொழில்நுட்ப கல்வி அமைச்சின் திணைக்களப் பணிப்பாளர் ஒபாயசேகரவின் வேண்டுகோளுக்கு இணங்க அரசாங்க அதிபரின் சிபார்சுடன் பூங்கா கட்டுவதற்கான 25 ஏக்கர் காணி அச்சுவேலி மாகாண காணி ஆணையாளரினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனப் பணிப்பாளர் என்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.

 

11-03-2009, 02.13PM

மத்திய அரசை குறைகூறுவதனை விடுத்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் - காங்கிரஸ் தங்கபாலு
 

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குறைகூறுவதனை விடுத்து தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழக அரசுடன் இணைந்து செயற்படவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் தக்கபாலு தெரிவித்துள்ளார்.
 

சென்னை சத்தியபவனில் நேற்று (10.03.2009) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் வாதிகள் சிலர் இலங்கைக்கு இந்திய மத்திய அரசு ஆயுத உதவியினை வழங்குவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். அவ்வாறு எதனையும் செய்ய வில்லை என நாம் பலமுறை கூறியுள்ளோம் ஆனால் இலங்கைக்கு இராணுவ உதவியினை வழங்கிவரும் சீனா, பாக்கிஸ்தான் இஸ்ரேல் போன்ற நாடுகளை இவர்கள் கண்டிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

11-03-2009, 01.43PM

வெள்ளவத்தையில் ஆசிரியை கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
 

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் தமிழ் ஆசிரியை ஒருவர் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளினால் நேற்று (10.03.2009) மாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

இராஜகிரிய றோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் கணபதிப்பிள்ளை கேதீஸ்வரி (வயது 30) என்பவரே பஸஸ்லேனிலுள்ள அவரது வீட்டில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் மற்றும் பிரதி அமைச்சர் பி.இராதாகிருஸ்னன் ஆகியோரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

11-03-2009, 01.27PM

நிதிப்பிரச்சினையினால் அரசை தொடர்ந்து கொண்டு செல்வதில் சிக்கல் - லக்ஸ்மன் கிரியல்ல
 

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியினைப் பெற்றுக்கொள்ளாது போனால் அரசாங்கத்தினை தொடர்ந்தும் கொண்டு செல்வதில் சிக்கல் நிலை தோன்றும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
 

கொழும்பில் இன்று (11.03.2009) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் சர்வதேச நாணயநிதியத்தினால் நிதி வழங்கல் தொடர்பான விபரத்தினை அடுத்த நாடாளுமன்ற அமர்வில் தெளிவுபடுத்துமாறு சபாநாயகரிடம் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சீனா ஈரான் ஆகிய நாடுகளிடம் அரசு கடன்கோரியிருப்பதாகவும் அதனை அந்நாடுகள் நிராகரித்துள்ள நிலையில் சர்வதேச நாணயநிதியத்திடம் நிதியினை பெறுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

11-03-2009, 01.16PM

குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் தொகை 15 ஆக உயர்வு.
 

மாத்தற அக்குரஷ ஜூம்பா பள்ளிவாசலுக்கு அருகில் முஸ்லீம் மக்களின் ஊர்வலத்தின் மீது புலிகள் நடாத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 15 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

இந்தச் சம்பவத்தில் அமைச்சர் மஹிந்த விஜேசேகர மற்றும் தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எச்.ஜீ.சிறிசேன உட்பட காயமடைந்தோர் தொகையும் 60 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


 

சம்பவத்தில் காயமடைந்தோரில் 25 பேர் மாத்தறை வைத்தியசாலையிலும் 35 பேர் அக்குரஸ்ஷ வைத்தியசாலையிலும் 15 பேர் காலி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 

11-03-2009, 12.50PM

அக்குரஷ தற்கொலைத் தாக்குதலை அரசாங்கம் கண்டித்துள்ளது.

 


 

மாத்தற அக்குரஷ கொடப்பிட்டிய ஜூம்மா பள்ளிவாசலுக்கு அருகில் நேற்று (10.03.2009) புலிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதலினை அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

 


பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அரசாங்கம் முஸ்லீம்களின் மீலாத்துன் நபி விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டோரை இலக்கு வைத்து புலிகள் நடாத்திய இத்தாக்குதல் மிக கொடூரமானது எனத் தெரிவித்துள்ளது.

 

 

இதேபோன்று கடந்த 1993ம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம் மக்கள் மீது புலிகள் தாக்குதல் நடாத்தினர் என்பதனை சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம் தாக்குதலில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த அனைவரினது குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.

 

11-03-2009, 09.38AM

புல்மோட்டையில் இந்திய இராணுவத்தின் முகாமே அமைக்கப்பட்டுள்ளது - ஜே.வி.பி

 

வடக்கில் யுத்தத்தில் காயமடையும் மக்களுக்காக புல்மோட்டையில் இந்தியா அமைத்துள்ள வைத்தியசாலை வைத்தியசாலை அல்ல எனவும் அது இந்திய இராணுவத்தின் முகாம் என்றும் ஜேவிபி குற்றம் சாட்டியுள்ளது.

 

இராணுவத்தினரது வெற்றியை தாரவார்த்துக் கொடுத்து இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் தேவைகளை பூர்த்தி செய்யும்வகையில் அதிகாரப் பகிர்வொன்றின் மூலம் நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கு இந்தியா முயல்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
 

கோட்டை சோலிஸ் ஹோட்டலில் நேற்று (10.03.2009) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ ஐரோப்பாவாவே உதவத் தேவையில்லை எமது இராணுவத்தினரே இன்னும் ஓரிரு தினங்களில் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவர் எனத் தெரிவித்துள்ளார்.

 

11-03-2009, 09.34AM

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் சிவசங்கர்மேனன் ஹிலாரி கிளின்டனுடன் பேச்சு.
 

இலங்கையின் தற்போதய பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனை இந்திய வெளியுறவுத்துறை செயலர் சிவர்சங்கர் மேனன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள அவர் நேற்று முன்தினம் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து 45 நிமிடங்கள் பேச்சு நடாத்தியுள்ளார். இலங்கையில் நடைபெறும் யுத்தம் அதற்குள் மக்கள் சிக்கித் தவிர்ப்பது தொடர்பாக இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

11-03-2009, 09.20AM

மாத்தற அக்குரஷ தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நஸ்டஈடு.
 

மாத்தற அக்குரஷ கொடப்பிட்டிய பகுதியில் நேற்றயதினம் (10.03.2009) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவருக்கும் நஸ்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 


 

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாவும் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாவும் நஸ்டஈடாக வழங்கப்படும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் இந்த நஸ்டஈடுவழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

10-03-2009, 03.25PM

யாழ் தேவி ரயிலினை வடக்கு நோக்கி அனுப்பும் தேசிய வேலைத்திட்டம் 23ம் திகதி ஆரம்பம்.
 

யாழ் தேவி ரயிலினை மீண்டும் வடக்கு நோக்கி அனுப்புவதற்கான தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் 23ம் திகதி ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டின் அபிவிருத்தியில் இது முக்கிய செயற்பாடு எனக் குறிப்பிட்டுள்ள போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகுபெரும 1990ம் ஆண்டின் பின்னர் யாழ் தேவி ரயில்சேவைகள் இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

புலிகள் தண்டவாளங்களுக்கு குண்டு வைத்ததனாலும் ரயிலினை தீயிட்டு கொழுதியதன் காரணமாகவும் ரயில்சேவைகள் நிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கேசன்துறை வரையில் மீண்டும் ரயில் பாதையினை புனரமைப்புச் செய்வதற்கு 4 கோடியே 50 இலட்சம் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் தெரிவித்துள்ளார்.

 

10-03-2009, 03.10PM

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழக மற்றும் மத்திய அரசுகள் தோல்விகண்டுள்ளன - தா.பாண்டியன்
 

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் தோல்வி கண்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


சென்னை சேப்பாக்கத்தில் அ.தி.மு.கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இந்திய மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை எனக் குற்றம் சாட்டிய அவர் இந்த நிலை நீடித்தால் பாரிய நெருக்கடி நிலைதோன்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

10-03-2009, 12.20PM

மாத்தற அக்குறஷவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அமைச்சர் மகிந்த விஜயசேகர காயமடைந்துள்ளார்.
 

மாத்தற அக்குறஷ கொடப்பிட்டிய முஸ்லீம் பள்ளிவாசலுக்கு அருகில் இன்று (10.03.2009) காலை 10.40 மணியளவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்தும் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

 


இந்தச் சம்பவத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் அமைச்சர் மகிந்த விஜயசேகர காயமடைந்துள்ளார் என்றும் அவர் மாத்தற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு முஸ்லீம் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி அமீர் அலி மகிந்தயாப்பா உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

10-03-2009, 11.55AM

ஏ9 ஊடாக மீண்டும் பொருட்கள் யாழ் குடாநாட்டிற்கு - றிசாட்
 

யாழ்குடாநாட்டு மக்களுக்காக நாளை மறுதினம் மீண்டும் ஒரு தொகுதி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏ9 வீதியூடாக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

 

ஏ9 வீதி புலிகளிடமிருந்து மீட்கப்பட்டதன் காரணமாக இந்த வரப்பிரசாதம் யாழ் குடாநாட்டு மக்களுக்கு கிட்டியுள்ளதாகவும் மாதாந்தும் குடாநாட்டு மக்களுக்கு 150 லொறிகளில் பொருட்களை அனுப்ப தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நேற்றயதினம் அனுப்பப்பட்ட பொருட்கள் தடையின்றி யாழ் குடாநாட்டை சென்றடைந்திருப்பதாகவும் இதன் மூலம் இனிவரும் காலங்களில் யாழ் குடாநாட்டில் பொருட்களின் விலைகள் குறைவடையும் வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

10-03-2009, 11.40PM

அக்குறஷ குடப்பிட்டியவில் முஸ்லீம்களின் ஊர்வலத்தின் மீது புலிகள்  தற்கொலைத் தாக்குதல்.
 

அக்குறஷ குடப்பிட்டிய பகுதியில் முஸ்லீம் மக்கள் நடாத்திய ஊர்வலமொன்றில் இன்று (10.03.2009) காலை 10.40 மணியளவில் புலிகள் தற்கொலைத் தாக்குதல் ஒன்றினை நடாத்தியிருப்பதாக தெரியவருகின்றது.
 

நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தை முன்னிட்டு குறித்த பகுதியில் அமைந்துள்ள பள்ளியொன்றினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்விலேயே இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, மகிந்தயாப்பா, மகிந்தவிஜயசேகர உட்பட பலர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் சம்பவத்தில் ஏற்பட்டுள்ள சேதவிபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

 

10-03-2009, 10.13AM

குடாநாட்டில் வேகத்தடைகளை படையினர் அகற்றியுள்ளனர்.
 

யாழ் குடாநாட்டில் தற்போது நிலைமை சீரடைந்து வருவதனையடுத்து பிரதான வீதிகளில் போடப்படிருந்த வேகத் தடைகளை இராணுவத்தினர் அகற்றிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த காலங்களில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட சில சம்பவங்களினை அடுத்து வாகனங்களுக்கான வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக இராணுவ முகாங்களுக்கு முன்பாக வேகத்தடைகள் போடப்பட்டிருந்தன தற்போது அவற்றினை படையினர் அகற்றியுள்ளதனால் மக்கள் அதிகளவில் நன்மையடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

10-03-2009, 10.06AM

பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதர் சிங்கை அமைச்சர் இராதாகிருஸ்ணன் பார்வையிட்டுள்ளார்.
 

புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்ட ஆனந்தவிகடன் புத்தகப் பிரதிகளை யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் அனுப்பியதன் பின்னணியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் ஸ்ரீதர் சிங் மற்றும் அவரின் உதவியாளர் எஸ்.சுதர்சன் ஆகியோரை அமைச்சர் பி.இராதாகிருஸ்ணன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.


இந்தியாவில் அச்சிடப்படும் குறித்த புத்தகத்தில் புலிகள் அமைப்பின் படங்கள் மற்றும் செய்திகள் என்பன வரையப்பட்டிருந்தது அதனை விமானம் மூலம் யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுவிட்டு திரும்பியபோது கைது செய்யப்பட்ட இவர் கல்கிசைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரின் விடுதலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடியிருப்பதாக பிரதி அமைச்சர் பி.இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

10-03-2009, 09.57AM

முஸ்லீம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் வாழும் நிலை வெகுவிரைவில் ஏற்படும் - ஜனாதிபதி
 

புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளவும் சென்று சுதந்திரமாக வாழக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


உலகெங்கும் உள்ள முஸ்லீம் மக்கள் மீலாத் தினத்தைக் கொண்டாடுவதனையிட்டு அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

முஸ்லீம் மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் இத்தினத்தில் நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவி மக்கள் மத்தியில் சகிப்புத்தன்மையும் புரிந்துணர்வும் ஏற்பட இறைவனை பிராத்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இம்மக்களுடன் தாமும் இணைந்து அதற்காக பிராப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

10-03-2009, 09.55AM

தமிழ் மக்களுக்கு அ.தி.மு.க ஒரு கோடி ரூபாய் வழங்கவுள்ளது.
 

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக ஒரு கோடி ரூபாய் நிதியினை வழங்கவுள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

 


இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தி நேற்றயதினம் (09.03.2009) அவர் நடாத்திய உண்ணாவிரதத்தின் முடிவில் இதனை அறிவித்துள்ளார். தமது சொந்த நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாவினை வழங்கியுள்ளதாகவும் அதிமுக சார்ப்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

10-03-2009, 09.53AM

இந்தியாவிலிருந்து மற்றுமோர் மருத்துவர்குழு வருகின்றது.
 

இந்தியாவின் மருத்துவர்கள் குழு ஒன்று நேற்றயதினம் இலங்கை வந்துள்ள நிலையில் மற்றுமோர் மருத்துவர் குழு இன்று (10.03.2009) இலங்கை வரவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.


மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து வரும் காயமடைந்தோர் மற்றும் நோயாளர்களுக்கு மருத்து உதவியினை வழங்குவதற்காக இவர்கள் இலங்கை வந்திருப்பதாக சுகாதார அமைச்சின் செயலர் அத்துலகாந்த லியனகே தெரிவித்துள்ளார்.

 

10-03-2009, 09.41AM

மேலும் 144 சிவிலியன்கள் அரச பகுதிக்குள் வந்துள்ளனர்.
 

புலிகளுடனான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பி வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.


இதற்கு அமைய நேற்று முன்தினம் (08.03.2009) மேலும் 144 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர். இவர்களில் 55 ஆண்கள் 47 பெண்கள் 23 சிறுவர்கள் அடங்குவதாக குறிப்பிட்டுள்ள தேசிய பாதுகாப்பு மையம் விசாரணைகளின் பின்னர் அடிப்படைவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

10-03-2009, 09.27AM

60க்கு மேற்பட்டோரை உறவினர்களுன் இணைப்பதற்கு நடவடிக்கை - அமைச்சர் றிசாட் பதியுதீன்
 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து தப்பி வந்தவர்களில் 60 வயத்திற்கு மேற்பட்டோரை அவர்களது உறவினர்களுடன் இணைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்;த்த சேவைகள் நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


யுத்தம் இடம்பெறும் பகுதிகளிலிருந்து தப்பி வந்துள்ள மக்களின் தேவைகள் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மாநாடு ஒன்று நேற்றயதினம் (09.03.2009) வவுனியா அரச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது அமைச்சர் றிசாட் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் திணைக்கள அதிகாரிகள் உட்பட உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

10-03-2009, 09.22AM

பா. கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார்.
 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை ஸ்தாபகரும் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் பெற்றுக்கொண்டுள்ளார். இந்த உறுப்புரிமை வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையில் நேற்று (09.03.2009) மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

 

 

விடுதலைப் புலிகள் என்ற பதம் தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதனை சுட்டிக்காட்டுவதாகவும் எனவே அதிலிருந்து தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தனது ஆதரவாளர்களையும் அதில் இணைத்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். நேற்றயதினம் கலந்துகொண்டவர்களில் 15 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ கட்சியின் உறுப்புரிமையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் முரளீதரனுக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ முன்னிலையில் அரசியல் அமைப்பு விவகார மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக நேற்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

 

10-03-2009, 09.15AM

கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கும் இந்தியாவிற்கும் தொடர்பில்லை - அமைச்சர் ரோகித போகல்லாகம
 

பாக்கிஸ்தான் தாகூர் நகரில் கடந்த 3ம் திகதி கிரிக்கெட் அணியினர் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இந்தியாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.
 

இந்த தாக்குதல் தொடர்பான இடைக்கால அறிக்கையினை இந்தியா வெகு விரைவில் சமர்ப்பிக்கும் எனத் தெரிவித்துள்ள அவர் தீவிரவாதத்தினை ஒழிப்பதற்கு இந்தியா இலங்கைக்கு பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கிவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

09-03-2009, 05.31PM

உலமாசபையின் செயலாளர் மீது ஆயுததாரிகள் தாக்குதல்.
 

மட்டக்களப்பு காத்தான்குடி உலமாசபையின் செயலாளர் எம்.ஏ.சி.ஜெனுலாத்தீன் (வயது 35) அடையாளம் தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்திருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளார்.


நேற்று (08.03.2009) இரவு 8.30 மணியளவில் உலமா சபை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவேளையில் இவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவத்தினை அடுத்து படுகாயங்களுடன் காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

09-03-2009, 05.12PM

போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அ.தி.மு.க  போராட்டம்.
 

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தி அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் சார்ப்பி;ல் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் என்பன இன்று (09.03.2009) இடம்பெற்றுள்ளது.


சென்னை சேப்பாக்கத்தில் அ.தி.மு.க தலைவர் செல்வி ஜெயலலிதா தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் யுத்தத்தினால் அல்லல்பட்டு உணவு மற்றும் மருந்துவ வசதிகள் அற்ற நிலையிலுள்ளதாகவும் எனவே யுத்தத்தினை நிறுத்தி அவர்களுக்கான அனைத்துத் தேவைகளும் நிறைவு செய்யப்படவேண்டும் என அ.தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

09-03-20009, 04.55PM

400 மெற்றித்தொன் பொருட்கள் ஏ9 ஊடாக அனுப்பி வைப்பு.

 


 

யாழ் குடாநாட்டு மக்களுக்காக ஏ9 வீதி ஊடாக இன்று (09.03.2009) 400 மெற்றித் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 24 வருடங்களின் பின்னர் இவை கொழும்பிலிருந்து யாழ் குடாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு இடையில் ஒற்றுமையினை மேம்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

 

09-03-2009, 10.23AM

மட்டு. காக்காச்சிவெட்டையில் இளம் பெண் சுட்டுக்கொலை
 

மட்டக்களப்பு வெல்லாவெளி காக்காச்சிவெட்டைப் பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் நேற்று (08.03.2009) ஆயுததாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை பேரின்பநாயகி (வயது 33) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற ஆயுததாரிகள் பெயர் கூறி வெளியே அழைத்துவிட்டு அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

09-03-2009, 10.12AM

பா.உறுப்பினர் முரளீதரன் தலைமையில் குழுவொன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.
 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையிலான 2000 பேரைக் கொண்ட குழுவொன்று இன்று (09.03.2009) மாலை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.

 

திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினரே அலரிமாளிகையில் இன்று இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது கிழக்கு மாகாண அபிவிருத்தி குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வற்கான திட்டங்கள் தொழில் வாய்ப்புக்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

09-03-2009, 10.03AM

100 நாட்களில் இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு - அத்வானி

 

இலங்கைத் தமிழர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் அரசாங்கமே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள இந்திய எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி தமது பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தால் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு 100 நாட்களில் தீர்வு காணும் எனத் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று முன்தினம் (07.03.2009) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டமொன்னில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தமிழர் வாழ்விற்கு முன்னுரிமை அழிக்கப்படும் முதல்வரும் 100 நாட்களுக்குள் அவர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மலேசியத் தமிழர்களின் பிரச்சினையைக் கண்டு கவலையுறும் தமிழக மக்களை பாராட்டுவதாக தெரிவி;த்துள்ள அவர் இலங்கை தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

 

09-03-2009, 09.52AM

புதுக்குடியிருப்பில் மோதல் தீவிரமடைந்துள்ளது - தேசிய பாதுகாப்பு தகவல் மையம்

 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மோதல் தீவிரமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

கடந்த இரு தினங்களில் அங்கு இடம்பெற்ற மோதல்களில் 100 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மோதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் புலிகளின் 58 சடலங்களையும் ஆயுதங்கள் பலவற்றினையும் படையினர் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர்; பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். எதிர்வரும் 72 மணி நேரப் பகுதியில் அங்கு மேர்தல் தீவிரமடையும் வாய்ப்புக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

09-03-2009, 09.43AM

வடபகுதிக்கு உதவிப் பொருட்கள் சென்றடைவதில் உள்ள தடைகள் தொடர்பில் கவலையடைந்துள்ளோம் -  கலின்
 

வன்னி பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதில் உள்ள தடைகள் குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனித உரிமைப் பிரதிநிதி வோல்டன் கலின் தெரிவித்துள்ளார்.


மக்களுக்கு நிவாரணப் பொருட்களும் மற்றும் ஏனைய வசதிகளும் சென்றடைவதற்கு உள்ள தடைகள் அகற்றப்படவேண்டும் என வலியுறுத்திய அவர் மோதலில் ஈடுபட்டுள்ள அனைவரும் மனிதாபிமான சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜெனீனாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 10 வது கூட்டத் தொடரில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

09-03-2009, 09.34AM

ஜனாதிபதியின் சட்டதரணியாக ஞானதாசன் பதவியேற்பு.
 

மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 30ம் திகதி நியமிக்கப்பட்ட ஐயாத்துரை ஞானதாசன் ஜனாதிபதியின் சட்டதரணியாக இன்று (09.03.2009) பதவியேற்கவுள்ளார்.
 

இவர் முறையான அதீத கவனம் எடுக்கப்பட்ட தயார்படுத்தல் மொழியை கையாளும் ஆற்றல் சட்டம் தொடர்பான அறிவு என்பன காரணமாக எப்போதும் அவர் சட்டத்துறையினரினதும் சட்டத்தரணிகள் சங்கத்தின் பாராட்டினை பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

09-03-2009, 09.20AM

அரசியல் தீர்வு தயாரிக்கப்படும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படும் - ரோகித

 

வடக்கை முழுமையாக பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டதன் பின்னர் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றினை முன்வைப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

 

அரசியல் தீர்வினை தயாரிப்பது தொடர்பில் பேச்சு வார்த்தையினை நடாத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்புவிடுத்துள்ளோம். தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு இவ்விடயத்தில் இணைந்து செயற்படும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஏற்கனவே சில தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவே நேரடியாக பேச்சுவார்த்தை மேற்கொள்வார் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு சர்வதேச சமூகமும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

08-03-2009, 09.46PM

தமிழனத்தின் போராட்டம் புலிகளினால் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது - சந்திரகாந்தன்
 

தமிழ் மக்களின் ஜனநாயக தார்மீகப் போராட்டம் புலிகளின் முறைதவறிய போராட்டத்தினால் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

 

இதன் காரணமாக சர்வதேசத்தில் தமிழினம் வெக்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் தற்போது இடம்பெற்றுவரும் யுத்தத்தில் தாம் தோல்வி கண்டுள்ளமையை ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார். அதனை மறைப்பதற்காக அவர்கள் மக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

 

08-03-2009, 09.27PM

அரச பகுதிக்குள் தப்பி வந்த மக்கள் மீது புலிகள் சூடு.

 

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தப்பிச் செல்லும் பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுவரும் நிலையிலும் மேலும் ஒரு தொகுதி பொதுமக்கள் இன்று (08.03.2009) புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வந்திருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

 

புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரிடம் இன்று காலை 45 பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். தப்பி வந்த இம்மக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூட்டினை நடாத்தியிருப்பதாகவும் இதில் 17 வயதுடைய யுவதி ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

08-03-2009, 09.18PM

யாழ் குடாநாட்டு விவசாயிகளின் உற்பத்திப்பொருட்களை தென்னிலங்கையில் சந்தைப்படுத்த ஏற்பாடு.
 

யாழ் குடாநாட்டு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை தென்னிலங்கைக்கு கொண்டு வந்து சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அனர்த்த நிவாரண மீள் குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

 

இதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ள அவர் அந்தப் பொருட்கள் அனைத்தினையும் ஏ9 வீதியூடாக தென்னிலங்கைக்கு கொண்டுவரும் வாய்ப்புக்கிட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

08-03-2009, 09.10PM

வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ரணில் விக்கிரமசிங்க
 

இலங்கையில் யுத்தத்தின்போது பலியாகியுள்ள இராணுவத்தினரின் மனைவி மற்றும் பிள்ளைகளை பாதுகாக்கும் வகையிலான திட்டங்கள் எதனையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பாணந்துறையில் இன்று (08.03.2009) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். பல்வேறு வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

08-03-2009, 03.42PM

ஆயுதக்களைவினை வரவேற்பதாக ஆனந்தசங்கரி தெரிவிப்பு.
 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தமது ஆயுதப்பிரிவைக் கலைத்து ஆயுதங்களை ஒப்படைத்துள்ளமையை தாம் வரவேற்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.


இந்த தீர்மானத்தினை எடுப்பதற்கு முதலமைச்சர் சந்திரகாந்தனின் வழிநடத்தலே காரணம் என்றும் அதன் பெருமை அனைத்தும் அவரையே சாரும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தற்போது கிழக்கு மாகாணத்தில் உண்மையான ஜனநாயகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் ரிஎம்விபி அமைப்பின் உறுப்பினர்கள் தமது கட்சியின் பெயரிலுள்ள புலிகள் என்ற வாசகத்தினை நீக்குவதுடன் சிறார்கள் எவராவது இருந்தால் அவர்களையும் விடுவித்துவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

08-03-2009, 03.24PM

யாழ் குடாநாட்டில் சில வீதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை.
 

யாழ் குடாநாட்டில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாதுள்ள வீதிகளை 6 மில்லியன் ரூபாய் செலவில் மீண்டும் புனரமைப்பதற்கு வீதிஅபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


இதற்கு அமைய 10 கிலோ மீற்றர் நீளமான திருநெல்வேலி புத்தூர் வீதி ஒரு கிலோ மீற்றர் நீளமான ஏழாலை கட்டுவன் வீதி 6 கிலோ மீற்றர் நீளமான வீரவாணி வாகரைவத்தை வீதி என்பன புனரமைக்கப்படவுள்ளது.

 

08-03-2009, 03.15PM

கனடாவில் புலிகளின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்க இலங்கை இளைஞர் அமைப்பு தோற்றம்.
 

கனடாவில் புலிகள் இயக்கம் மேற்கொண்டுவரும் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிப்பதற்காக இலங்கை இளைஞர்கள் என்ற பெயரில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்த அமைப்பு கனேடிய அரசியல் வாதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து புலிகள் இயக்கத்தின் தவறான செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கவுள்ளதுடன் அரசு மேற்கொண்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிகிறது.

 

08-03-2009, 02.55PM

ஏ9 ஊடாக குடாநாட்டிற்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள்.

 

கடந்த 20 வருடங்களில் முதற்தடவையாக ஏ9 வீதி ஊடாக குடாநாட்டு மக்களுக்கு வேண்டிய அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இதற்கு அமைய நாளையதினம் (09.03.2009) கொழும்பிலிருந்து 40 லொறிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் யாழ் குடாநாட்டிற்கு செல்லவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரட்ண தெரிவித்துள்ளார். இந்த லொறிகளில் அரி சீனி பருப்பு கோதுமை மா உள்ளிட்ட 400 மெற்றித்தொன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவை நாளை மாலையே யாழ் கைதடிப்பகுதியை சென்றடையும் எனத் தெரிவித்துள்ளார்.

 

08-03-2009, 02.36PM

அரச கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து வரும் நோயாளர்களை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு.
 

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு கொண்டு வரும் நோயாளர்களை மன்னார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

தற்போது அங்கு 400 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மேலும் புதுமாத்தளன் பகுதியிலிருந்து அழைத்துவரப்படும் நோயாளர்களை மன்னாருக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வைத்தியசாலைக்கு விசேட வைத்தியர்கள் இருவரை அனுப்பி வைப்பதற்கும் எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சு வைத்தியசாலைக்கு வேண்டிய சுகாதார வசதிகள் அனைத்தினையும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

08-03-2009, 02.29PM

யாழ் மாநகரசபைத் தேர்தலினை நடாத்துவது தொடர்பில் ஜனாதிபதி தேர்தல்கள் ஆணையாளரைச் சந்திக்கவுள்ளார்.
 

யாழ் மாநகரசபைக்கான தேர்தலினை நடாத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. இதற்காக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ எதிர்வரும் சில நாட்களில் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாவுள்ளதாகவும் தெரிகிறது. இந்த பேச்சு வார்த்தையின்போது யாழ் மாநகரசபைக்கான வேட்பு மனுக்களை கோருவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

08-03-2009, 02.24PM

500 மெற்றித்தொன் பொருட்கள் அனுப்பி வைப்பு - திவாரட்ண

 

அரச கட்டுப்பாடற்ற முல்லைத்தீவுப் பகுதியில் தங்கியுள்ள மக்களுக்கான இன்று (08.03.2009) பில்லுறான் சரக்கு கப்பலில் 500 மெற்றித் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரட்ண தெரிவித்துள்ளார்.


கேர்துமை மா பருப்பு சீனி பால்மா எண்ணை மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் இந்தக் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் முதன்முறையாக அரச கட்டுப்பாடற்ற முல்லைத்தீவிற்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் இவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

08-03-2009, 02.10PM

167 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்துள்ளனர்.
 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து நேற்று (07.03.2009) மேலும் 167 அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

இவர்களில் 64 ஆண்கள் 70 பெண்கள் 33 சிறுவர்கள் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார். விசாரணைகளின் பின்னர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

08-03-2009, 09.39AM

தேர்தலில் ஐ.ம.சு.கூ வெற்றிபெறும் - நிமல்சிறிபாலடிசில்வா
 

மேல் மாகாணசபைத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெறும் எனவும் அதற்காக மக்கள் இப்போதே தயாராகிவிட்டனர் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
 

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜேவிபி என்பன செய்த அநீதிகளின் பலனாக மக்கள் அவர்களை தோற்கடித்து வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்தனர் அதேபோன்று இந்தத் தேர்தலிலும் தமது கட்சி வெற்றிபெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

08-03-2009, 09.34AM

ரிஎம்விபியின் ஆயுதப்பிரிவு ஆயுதங்களை கையளித்துள்ளது.
 

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தம்வசமிருந்த ஆயுதங்களை நேற்றயதினம் (07.03.2009) உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் கையழித்துள்ளது. கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள மட்டக்களப்பு மீனகத்தில் இந்த ஆயுதம் ஒப்படைக்கும் வைபவம் இடம்பெற்றுள்ளது.

 


ரிஎம்விபியின் ஆயுதப்பிரிவின் தலைவர்களான அஜித் மற்றும் தேவிகாந்த ஆகியோர் தமது ஆயுதங்களை இராணுவத் தளபதி தம்பத்பெர்னான்டோவிடம் கையளித்துள்ளனர். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் எட்வின் குணதிலக உட்பட இராணுவத்தின் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

08-03-2009, 09.27AM

அரச கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள மக்களை வெளியேற்றுவது தொடர்பில் அமெரிக்கா ஆராய்ந்து வருகின்றது -பௌவுச்சர்
 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் வழிமுறைகள் தொடர்பாக அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலர் ரிச்சர்ட் பௌச்சர் தெரிவித்துள்ளார்.


மக்கள் வெளியேறுவதற்கு விரும்பும்போதும் அச்சுறுத்தல் சூழல்நிலை காரணமாக அவர்கள் வெளியேறுவது தடைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் தெற்காசிய ஊடகவியலாளர்கள் குழுவொன்றை சந்தித்து பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

பாதுகாப்பு வலயங்கள் மீதோ அவ்வாறு அறிவிக்கப்பட்ட பகுதிகளிற்குள்ளிருந்தோ தாக்குதல்கள் நடாதப்படுவது நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் புலிகள் யுத்தத்தை நிறுத்தி பேச்சு வார்த்தையின் மூலம் தீர்;வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். புலிகளின் பகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களுக்கு ஓரளவிற்கேனும் உணவுப் பொருட்களை அரசாங்கம் அனுப்பி வருகின்றது. அதனையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். பாதுகாப்பு வலயங்களிலிருந்து புலிகள் ஷெல் தாக்குதல் நடாத்துகின்றனர். ஆனாலும் அரச படையினர் அப்பகுதிகள் மீது தாக்குதல் நடாத்தவேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். எனினும் புலிகளே முதலில் தாக்குதல்களை நிறுத்தவேண்டும் அதன் மூலம் மக்கள் பாதுகாப்பாக வெளியேறே அனுமதிக்க வேண்டும் இதன் பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

08-03-2009, 09.20AM

நாட்டின் ஒற்றுமையைப்பேண விமானப்படை உதவியுள்ளது - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
 

திருகோணமலை விமானப்படைத் தலைமையகத்தில் நேற்று (07.03.2009) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டின் ஒற்றுமை மற்றும் அபிமானத்தினைப் பெற்றுக்கொடுக்க விமானப்படையினர் உதவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படையினர் பின்னடையவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் துல்லியமாக தாக்குதல் நடாத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதிகளவான தாக்குதல்களை விமானப்படையினர் மேற்கொண்ட போதும் சிவிலியன்கள் மீது அவர்கள் தாக்குதல் நடாத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். கெரிலா பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த வேறுபல நாடுகள் அயல்நாட்டு இராணுவத்தின் உதவியினைப் பெற்றுள்ளபோதும் இலங்கை அதற்கு மாறாகவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

07-03-2009, 06.10PM

முன்னரங்க மோதல்களில் 32 புலி உறுப்பினர்கள் பலி


பாலமட்டரம் தாமரைக்குளம் புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் 32 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த மோதலில் அதிகளவிலான புலி உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள மையம் 45 சதுர கிலோ மீற்றர் பரப்பளவினுள் புலிகள் அமைப்பினை இராணுவத்தினர் ஒடுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த மோதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 15 புலி உறுப்பினர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

07-03-2009, 05.37PM

தமிழகத்திலிருந்து வெடிபொருள் கடத்த முயன்றவர் கைது.

 

தமிழகத்திலிருந்து இலங்கைக்க வெடிபொருட்களை கடத்திவர முயன்ற மேலும் ஒருவர் நேற்றயதினம் (06.03.2009) கைது செய்யப்பட்டுள்ளார். கரையோரப் பாதுகாப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இலங்கை அகதிகளை இறக்கிவிட்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பும்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

07-03-2009, 05.29PM

மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொள்ளவேண்டும் நவநீதம்பிள்ளை
 

இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தி வருவதாக ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதன்பிள்ளை தெரிவித்துள்ளார்.
 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் தனது முதலாவது அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய கிளைகளும் இலங்கை விடயம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் இலங்கை அரசாங்கம் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் வழங்கியுள்ள உறுதிமொழியினை தாம் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

07.03.2009, 05.20PM

பஸ் சாரதிக்கு கௌரவம் அளிக்க ஜனாதிபதி முடிவு.
 

பயங்கரவாதிகளின் தாக்குதலிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை காப்பாற்றிய பஸ் சாரதியை இலங்கைக்கு அழைத்து பாராட்டு தெரிவிப்பதற்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

 

பாக்கிஸ்தான் சாரதியை அழைத்து பாராட்டுவிழா நடாத்துமாறு ஜனாதிபதி விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு அமைய வெகு விரைவில் அவர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்படவிருப்பதாக தெரிகிறது.

 

07-03-2009, 02.41PM

பாதுகாப்புத்தேடி 92 பேர் அரச பகுதிக்குள் வந்தனர்.
 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மேலும் 92 பேர் பாதுகாப்புத் தேடி அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார்.

 

ஓமந்தை இராணுவ முன்னரங்கப் பகுதியை இவர்கள் வந்தடைந்திருப்பதாகவும் இவர்களில் 31 ஆண்களும் 39 பெண்களும் 22 குழந்தைகளும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

 

07-03-2009, 02.35PM

பயிற்ச்சிகளை நிறைவு செய்த அதிகாரிகளின் பிரியாவிடை

 

கடற்படை பயிற்ச்சிகளை நிறைவு செய்த கரேர் அதிகாரிகளின் பிரியாவிடை நிகழ்வு இன்று (07.03.2009) திருகோணமலை இறங்கு துறையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்ச்சியை நிறைவு செய்த 74 அதிகாரிகள் இன்று பிரியாவிடை பெற்றுக்கொள்ளவுள்ளனர். மேலும் இந்நிகழ்வில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

07-03-2009, 02.30PM

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்.
 

வடமேல் மாகாணத்தின் எதிர்கட்சி உறுப்பினர்கள் 19 பேருக்கு சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று (07.03.2009) முற்பகல் 10 மணியளவில் குருநாகலில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.


வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸபரல்ல முன்னிலையில் இந்த பதவியேற்பு வைபவம் இடம்பெற்றுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் 5 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 14 பேரும் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

 

07-03-2009, 09.24AM

மேலும் 406 பேர் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டனர்.
 

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து ஒன்பதாவது தடைவையாக 406 பேர் நேற்று (06.03.2009) இரவு திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரஸி விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

 

கிறீன் ஓசன் கப்பல் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளவர்களில் நோயாளர்கள் காயமடைந்தோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் 2700 பேருக்கு மேற்பட்டோரை கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து கடல் மார்க்கமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திருகோணமலைக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

 

07-03-2009, 09.18AM

புத்த பெருமானின் பனித தந்தத்தை ஜனாதிபதி தரிசித்தார்.

 

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வைக்கப்பட்டுள்ள புத்த பெருமானின் புனித தந்தம் நேற்று (06.03.2009) பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தனது பாரியாருடன் முதலில் புனித தந்தத்தை தரிசித்தார்.

 

 

ஜனாதிபதியுடன் தலதாமாளிகை தியவதன நிலமே திலங்க தேவபண்டார மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்துள்ளனர்.

புனித தந்தத்தினை பொமக்கள் தரிசிக்கும் நிகழ்வு எதிர்வரும் 19ம் திகதி பிற்பகல் 1 மணிமுதல் 5.30 மணிவரை இடம்பெறும் எனவும் இதனை முன்னிட்டு கண்டி நகர் உள்ளிட்ட தலதா மாளிகையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

07-03-2009, 09.15AM

முல்லைத்தீவிற்கு 500 மெற்றித் தொன் பொருட்கள் அனுப்பி வைப்பு - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திவாரட்ண
 

அரச கட்டுப்பாடற்ற முல்லைத்தீவுப் பகுதியில் தங்கியுள்ள மக்களின் தேவைக்காக 500 மெற்றித் தொன் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் நேற்று (06.03.2009) மாலை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரட்ண தெரிவித்துள்ளார்.

 

திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு கப்பல் தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளதாகவும் இதில் பருப்பு சீனி மா உள்ளிட்ட பல பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வரும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றிருப்பதாகவும் இதில் வெளிநாட்டு நிவாரணக் குழுக்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 

07-03-2009, 09.03AM

ரிஎம்விபியின் ஆயுதப் பிரிவு இன்று கலைக்கப்படும்.
 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப்பிரிவு இன்று (07.03.2009) முதல் உத்தியோகபூர்வமாக கலைக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தம்வசமுள்ள ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர் அஷாட் மௌலானா தெரிவித்துள்ளார்.

 

07-09-2009, 08.56AM

இந்திய இராணுவத்தின் மருத்துவர் குழு இலங்கை வரும்.
 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து தப்பி வரும் மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்வதற்காக இந்திய இராணுவத்தினரை உள்ளடக்கிய மருத்துவர்கள் குழு எதிர்வரும் 9ம் திகதி இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை வரும் இந்த மருத்துவர்கள் குழு புல்மோட்டை வைத்தியசாலையில் தமது பணிகளை முன்னெடுப்பர்; என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 7 கோடி ரூபாய் பெறுமதியான மருத்துவப் பொருட்களை கொண்டு வந்து அதனை சுகாதார அமைச்சிடம் இந்தக் குழு கையளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

07-03-2009, 08.50AM

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய அரசு நடவடிக்கை - ஹெகலிய
 

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் சிறந்த வேலைத்திட்டங்களை அமுல்படுத்தியுள்ளதாகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவு செய்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


வவுனியா மெனிக்பாம் நலன்புர்p முகாமில் தங்கியுள்ள மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை ஐ.நாவின் மனித உரிமை விவகாரங்களுக்கான செயலர் ஜோன்ஸ் கோம்ஸ் பாராட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் உதவிகள் அரசாங்கத்தின் ஊடாகவே மக்களை சென்றடையும் எனத் தெரிவித்துள்ள அவர் அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறான உதவிகள் வழங்கப்படுவதாயினும் அது அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் வழங்கப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

06-03-2009, 10.02PM

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தப்பி வந்த பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மூவர் பலி.

 


 

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டை நோக்கி தப்பி வந்த சிவிலியன்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடாத்தியிருப்பதாகவும் இச்சம்பவத்தில் 3 சிவிலியன்கள் உயிரிழந்தும் 2 பேர் காயமடைந்தும் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 


முல்லைத்தீவிலிருந்து 6 படகுகளில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தப்பி வந்த 76 பொதுமக்கள் மீது இன்று (06.03.2009) காலை புலிகள் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுள்ளனர். சடலங்களுடனும் காயங்களுடனும் வெற்றிலைக்கேணி கேவில் சுண்டிக்குளம் பகுதியில் கரைசேர்ந்த பொதுமக்களை மீட்ட படையினர் காயமடைந்தோரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் ஏனையோருக்கு அடிப்படைவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து பாதுகாப்பாக தங்க வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

06-03-2009, 09.15PM

பொதுமக்களுக்குள் மறைந்திருந்து புலிகள் தாக்குதல் நடாத்துகின்றனர் - உதய நாணயக்கார
 

வடக்கில் தற்போது மோதல் இடம்பெறும் பகுதிகளில் புலிகளின் 500க்கும் குறைவான உறுப்பினர்களே இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (06.03.2009) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்துப் பேசிய உதயநாணயக்கார பொதுமக்களுடன் மறைந்திருந்த நிலையிலேயே புலிப்பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்தி வருகின்றனர். இதனால் அங்குள்ள சிவிலியன்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பெரியளவிலான தாக்குதல்களை இராணுவத்தினர் தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

 

06-03-2009, 08.54PM

சகோதரத்துவத்துடனான சமூகத்தினை உருவாக்குவதே பிரதான நோக்கம் - பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க
 

இங்கிரிய வைத்தியசாலையில் இன்று (06.03.2009) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சகோதரத்துவத்துடனான சமூகம் ஒன்றினை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு தடையாக எந்த சக்திகள் இருந்தாலும் அவற்றினை அழிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபாலடிசில்வா உலக அளவுடன் ஒப்பிடுகையில் சுகாதாரத்துறையில் இலங்கை சிறந்த இடத்தினைப் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

06-03-2009, 08.41PM

அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களை தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்க சந்திக்கவுள்ளார்.
 

மேல் மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ளது.


இந்த சந்திப்பில் தற்போது வரையில் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாணசபைத் தேர்தலில் 19 அரசியல் கட்சிகள் 23 சுயேட்சைக்குழுக்கள் என்பன போட்டியிடவுள்ளதுடன் 2378 வேட்பாளர்கள் போட்டியிடவும் உள்ளனர்.

 

06-03-2009, 08.12PM

புலிகள் மக்கள் மத்தியிலுள்ள தமது ஆயுதங்களை களைய வேண்டும் - ஐ.நா செயலர் பாங்கிமூன்
 

இலங்கையில் யுத்தம் காரணமாக சிறுவர்கள் உட்பட அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பாங்கிமூன் தெரிவித்துள்ளார்.


ஐ.நாவின் நாளாந்த செய்தியாளர் மாநாடு நேற்றயதினம் (05.03.2009) இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய சபையின் பேச்சாளர் பொதுமக்கள் பாதிக்கப்படுவதனை நிறுத்துவதற்கு உடனடியாக யுத்தம் நிறுத்தப்படவேண்டும் இதன்மூலம் வன்னியில் சிக்குண்டுள்ள மக்கள் சுதந்திரமாக வெளியேறுவதற்கு வழியேற்படும் எனத் தெரிவித்துள்ளார். புலிகள் மக்கள் மத்தியில் காணப்படும் தமது ஆயுதங்களை களைவதுடன் சிறுவர்களை போராளியாக படையில் இணைப்பதனையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

06-03-2009, 07.48PM

நாட்டின் கொள்கையை ஏற்று சர்வதேச நிறுவனங்கள் செயற்படுகின்றன - ஹெகலிய ரம்புக்வெல்ல

 

தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று (06.03.2009) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல சர்வதேச அமைப்புக்கள் நாட்டின் கொள்கை மற்றும் உடன்படிக்கைக்கு அமையவே உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.


வடக்கில் இடம்பெறும் யுத்தத்தில் படையினர் தொடர்ந்தும் வெற்றிபெற்று வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர் புலிகளின் பாரிய அதிநவீன ஆயுதங்களையும் பெருந்தொகையாக படையினர் கைப்பற்றியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

06-03-2009, 07.03PM

மட்டு. புன்னன்குடாவீதியில் புலி உறுப்பினர் சுட்டுக்கொலை
 

மட்டக்களப்பு ஏறாவூர் புன்னன்குடா வீதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.


நேற்று (05.03.2009) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் புலிகள் அமைப்பின் உறுப்பினர் எனவும் அவர் வசமிருந்து மைக்குரோ ரக பிஸ்டல் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

06-03-2009, 06.41PM

போர் நிறுத்தத்தை வலியுறுத்தி போராட்டம் நடாத்த  அழைப்பு.
 

இலங்கையில் போரை நிறுத்த இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.


தமிழகம் முழுவதும் எதிர்வரும் 10ம் திகதி அறப்போராட்டமும் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும் இடம்பெறவுள்ளது. சென்னையில் இடம்பெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டம் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

06-03-2009, 06.32PM

வித்தியாதரனை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்.
 

சுடர்ஒளி பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் கைது செய்யப்பட்டதனைக் கண்டிதுத்தும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் கொள்ளுப்பி;ட்டி சந்தியில் நேற்று (05.03.2009) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 


 

சுதந்திரதிற்கான மேடை என்ற அமைப்பின் ஏற்பாட்டில் நண்பகல் 12 மணி முதல் 1 மணிவரையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன முன்னணியின் முக்கியஸ்தர்களான வீ.திருநாவுக்கரசு சமில் ஜெயநெத்தி நடராஜா ஜனகன் ஆர்.மகேந்திரன் ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய ஊடகத்துறையை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியத் தலைவர் லங்கா போலி மனித உரிமை ஆர்வலர் நிமல்கா பெனாண்டோ முஸ்லீம் இடதுசாரி முன்னணியின் செயலாளர் எம்.பைசால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

06-03-2009, 11.38AM

பொது மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவதற்கு புதிய இரு பாதுகாப்பு வழிகளை அறிவிப்பதற்கு அரசு தீர்மானம்.
 

வன்னியில் புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களை வெளியே கொண்டு வருவதற்கு இரு பாதுகாப்பான வழிகளை அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

 

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ தலைமையில் நேற்று (05.03.2009) நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியினைப் பெற்றுக் கொடுப்பதற்கு எண்ணியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்த முடிவு தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் ஒரு பாதை சாலைக்கு வடக்காகவும் மற்றய பாதை முல்லைத்தீவு நகரத்திற்கு தெற்காகவும் அறிவிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயம் ஊடாக இதுவரையில் 37 ஆயிரம் பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

06-03-2009, 11.32AM

புல்மோட்டையில் வைத்தியசாலை அமைக்க இந்தியா விருப்பம்.
 

வடக்கில் இடம்பெற்றுவரும் மோதல்களில் காயமடையும் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக 52 இந்திய இராணுவ வீரர்களுடன் சிறந்த மருத்துவர்களை உள்ளடக்கிய தற்காலிக வைத்தியசாலையொன்றினை புல்மோட்டையில் நிறுவுவதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.


5 இந்திய மருத்துவ நிபுணர்களையும் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களையும் குறித்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. இந்திய மருத்துவர்கள் குழு மற்றும் மருந்துப் பொருட்கள் என்பன இந்திய விமானங்கள் மூலம் குறித்த பகுதிக்கு அனுப்புவதற்கும் எண்ணியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.


மேலும் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் சுந்திரமாக வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அதற்காக போர் நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ளுமாறும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் அனியாயமான உயிரிழப்புக்களை தவிர்க்க முடியும் என தெரிவித்துள்ளது.

 

06-03-2009, 11.27AM

வங்கி முகாமையாளரை கடத்தியோர் கைது.
 

வவுனியாவில் கடந்த 3ம் திகதி கடத்தப்பட்ட வங்கி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் கடத்தி கப்பம் கோரிய நபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

இருவரையும் கடத்தியோர் 30 கோடி ரூபாய் கப்பம் கோரியதாகவும் அதற்கு வங்கி நிர்வாகம் மறுப்புத் தெரிவிக்கவே உறவினர்களிடம் ஒன்பதரை இலட்சம் பணம் கப்பமாக கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து கப்பப் பணத்தினை வழங்குவதற்கு உறவினர்கள் சென்றதாகவும் கப்பம் பெற வந்த நபர்களை சிவில் உடையில் பதுங்கியிருந்த பொலிஸார் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தினை அடுத்து வவுனியாவில் அமைந்திருந்த வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தாக தெரியவருகின்றது.

 

06-03-2009, 11.23AM

இடம்பெயர்ந்த மக்களின் சுகாதாரத் தேவையினை மேம்படுத்த அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
 

இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கான சுகாதாரத் தேவையினை மேம்படுத்த அரசாங்கத்திற்கு உதவுவதற்கு சர்வதேச நிறுவனங்களும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களும் முன்வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

சுகாதார அமைச்சர் நிமால் சிறிபாலடி தலைமையில் கொழும்பில் நேற்று (05.03.2009) இடம்பெற்ற கூட்டமொன்றில் குறித்த அமைப்புக்கள் இந்த உறுதிமொழியினை வழங்கியிருப்பதாக அமைச்சு அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

06-03-2009, 11.14AM

576 பேர் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவிப்பு.
 

அரச கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து தப்பி வந்த மேலும் 576 பொதுமக்கள் இராணுவத்திடம் தஞ்சமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.


184 பேர் சாலைப் பகுதியில் நிலைகொண்டுள்ள 55 வது படையணியிடம் தஞ்சமடைந்துள்ளதாகவும் 386 பேர் கடல் மார்க்கமாக திருகோணமலையை வந்தடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுக்காக அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்து நலன்புரி முகாங்களில் தங்கவைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது.

 

06-03-2009, 11.10AM

புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் துரோனர் விமானத் தாக்குதலில் பலி என தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவிப்பு.

 

புலிகளின் சிரேஸ் புலனாய்வு உறுப்பினர் துரோனர் இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் அறிவித்துள்ளது. இவர் சில காலத்திற்கு முன்னர் கொழும்பின் தாக்குதல் நடாத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்தவர் என தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 


முல்லைத்தீவு சாலைப் பகுதியில் பிரிகேடியர் சவேந்திரசில்வா தலைமையிலான 58வது படைப்பிரிவு புலிகள் மீது கடுமையான தாக்குதலினை தொடுத்து வருவதாகவும் நேற்றயதினம் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 40 ரி56 ரக துப்பாக்கிகள் உட்பட புலிகளின் 33 சடலங்களையும் மீட்டுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு சந்தி கைப்பற்றப்பட்டதன் பின்னர் தாம் மேற்கொண்ட முதலாவது கடுமையான தாக்குதல் இது என பிரிகேடியர் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

 

06-03-2009, 11.02AM
கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுடன் புலிகளுக்கும் தொடர்பு.
 

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை கடத்தி அவர்களை பணயக்கைதிகளாக வைத்துக் கொண்டு தம்மீதான தாக்குதலினை தடுத்து நிறுத்த புலிகள் அமைப்பு முயன்றிருக்கலாம் என வெளிவிவகார அமைச்சின் செயலர் கலாநிதி பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார்.

 

கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுடன் புலிப்பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாக தெரிவித்துள்ளமை குறித்து ஊடககங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். புலிகளுக்கும் இத்தாக்குதலுக்கு தொடர்பிருக்கலாம் என நம்பப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் பயன்படுத்தி ஆயுதங்கள் மற்றும் திட்டமிடல் போன்றவை புலிகள் அமைப்பை ஒத்ததாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

06-03-2009, 10.50AM

பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவர் - அனுரபிரியதர்சன
 

யுத்தம் முழுமையாக நிறைவுக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றி பாதுகாப்பினை உறுதி செய்ததன் பின்னர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர் என அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வரும் மக்களை தொடர்ந்தும் நலன்புரி முகாங்களில் தங்க வைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் அவர்களை வெகு விரையில் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதே அசின் இலக்காக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05.03.2009) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மனித உரிமை கண்காணிப்பகம் போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் வன்னியிலுள்ள மக்களை அரசாங்கம் கவனிப்பதில்லை என்ற பிரச்சாரங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன. இந்த அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் வன்னியில் வாழ்ந்த மக்களுக்கு கடந்த காலங்களில் எதனைச் செய்திருக்கின்றார்கள் என்பது படையினரின் வெற்றி மூலம் வெளிச்சமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மக்கள் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருக்கையில் புலிகளுக்கு மாளிகை போல் பங்கர்கள் நீச்சல் தடாகங்கள் பல கோடி ரூபாய் செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டதனை தற்போது அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.


வன்னியிலிருந்து வந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாங்களுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்துச் சென்று காண்பித்தோம் அவர்கள் திருப்தி வெளியிட்டுள்ளனர். எனினும் அங்கு சிறு சிறு குறைபாடுகள் உள்ளன. அடிக்கடி தொடர்ச்சியாக மக்கள் அரச கட்டுப்பாட்டிற்குள் இடம்பெயர்ந்து வருவதன் காரணமாக தங்கியுள்ளவர்களின் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். 30 வருடகாலமாக புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த இம்மக்களின் மூளை புலிகளுக்கு ஏற்றவாறு சலவை செய்யப்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக மாற்றுவதென்பது கடினமான விடயம் இம்மக்களுடன் புலி உறுப்பினர்களும் ஊடுருவியிருக்கலாம் எனவே அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு புலி உறுப்பினர்கள் என அடையாளம் காணப்படுபவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. ஐ.நாவினதும் சர்வதேச சட்டங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது எனவே சட்டவிரோத நடவடிக்கைகளில் அரசாங்கம் ஒருபோதும் ஈடுபடாது என்பதனை உறுதியாக தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

05-03-2009, 03.55PM

197 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்துள்ளனர்.
 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பி வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

நேற்றயதினமும் (04.03.2009) 192 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவி;த்துள்ளார். இவர்களில் 60 பேர் ஆண்கள் எனவும் 97 பேர் பெண்கள் எனவும் 35 பேர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ள அவர் விசாரணைகளின் பின்னர் பாதுகாப்பான இடங்களில் அவர்களை தங்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

05-03-2009, 03.27PM

யாழ்தேவி ரயில் சேவையினை காங்கேசன்துறை வரையில் நடாத்த தீர்மானம் - டளஸ் அழகுபெரும

 

யாழ்ப்பாணத்திற்கான யாழ்தேவி ரயில் சேவையினை காங்கேசன்துறை வரையில் நடாத்துவதற்கு எண்ணியுள்ளதாகவும் இதற்காக 34 ரயில் நிலையங்கள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகுபெரும தெரிவித்துள்ளார்.
 

இந்த திட்டம் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் புனரமைப்பு செய்யப்படவுள்ள ரயில் நிலையங்களில் 9 பிரதான ரயில் நிலையங்களாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஈரான் அரசு ரயில் பாதைகளை புனரமைப்பதற்கு நிதி உதவியினை வழங்க முன்வந்துள்ளதாகவும் இத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ தலைமையில் எதிர்வரும் 16ம் திகதி மாலை இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

05-03-2009, 03.19PM

தென்னிந்தியாவை பிளவு படுத்தி தமிழீழம் அமைப்பதற்கு பிரபாகரன் முற்படுகின்றார் பா.உ எல்லாவெல மேலானந்ததேரர்
 

தமிழீழம் என்ற மணல் கோட்டை உடைந்துவிட்ட நிலையில் தென்னிந்தியாவை பிரித்து தமிழீழத்தை அடைவதற்கான முயற்ச்சிகளை பிரபாகரன் மேற்கொண்டு வருகின்றார் என ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேலானந்த தேரர் தெரிவித்துள்ளார்.


அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பில் நேற்று (04.03.2009) கலந்து கொண்டு உரையாற்றிய அவர் புலிகளின் இறுதி விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினருக்கு ஜாதிக ஹெல உறுமய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுன் அவர்களுக்கு ஆசிர்வாதங்களையும் வழங்குகின்றது. தமிழ் மக்களுக்கு சுனாமி அனர்த்தத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய உதவி புர்pந்து வருகின்றது. இன்றும் உதவுகின்றது.

 

ஆயுதங்களுடன் ஈழம் இராஜியத்தை உருவாக்கும் அரசியல் தீர்விற்கு எமது கட்சி ஆதரவளிக்காது மாறாக நாட்டைபற்றி பேசுங்கள் அரசிற்கும் படையினருக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்காதீர்கள் என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார். புலிகளை அழித்தாலும் தமிழீழ கோரிக்கை கைவிடப்படமாட்டாது என கூட்டமைப்பினர் தெரிவித்துக் கொண்டு அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களைப் பெற்று புலிகளுக்கு சார்பாக பேசி வருகின்றனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

05-03-2009, 03.11PM

வெலிகந்தவில் இரு சிவிலியன்கள் சுட்டுக்கொலை.
 

பொலநறுவை வெலிக்கந்தப் பகுதியில் நேற்று (04.03.2009) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.


அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும் சிவிலியன்கள் எனவும் அது தொடர்பான விசாரணைகளை வெலிக்கந்த பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

 

05-03-2009, 02.46PM

த.ம.வி.பு அமைப்பினர் ஆயுதங்களை கையளிக்கவுள்ளனர்.
 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் தமது ஆயுதங்களை உத்தியோக பூர்வமாக களையவுள்ளதாக அதன் பேச்சாளர் அஷாத் மௌலானா தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (07.03.2009) இடம்பெறும் எனவும் இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் கட்சியின் உயர் அரசியல்பீட உறுப்பினர்களினால் ஆயுதங்கள் பாதுகாப்பு படையினரிடம் கையளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பாதுகாப்பு அமைச்சும் சர்வதேச குடியகழ்வு பேரவையும் இணைந்து அந்த கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இவ்வாறு பயிற்ச்சி பெற்று வெளியேறியுள்ள ஒரு குழுவினர் வெளிநாட்டிற்கு வேலைபெற்று செல்லவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

05-03-2009, 02.37PM

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது - விக்கிரமபாகு
 

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இலங்கை அரசாங்கம் செயற்படுவதாக இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு அமெரிக்க இராணுவத்தினரை அழைத்து வருவது தொடர்பாக அண்மையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள அவர் மகிந்த சிந்தனைக்கு அமைய நாட்டில் வேலைத்திட்டங்கள் இடம்பெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் சிந்தனைக்கு அமையவே இங்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் வடக்கு கிழக்கின் வளங்கைளை சூறையாடுவதற்கு இந்தியா முயற்ச்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு மேலும் கருத்து வெளியிட்ட அவர் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த மாகாணசபை ஏன் உருவாக்கப்பட்டது என்பதனை அறியாது தேர்தல்கள் நடாத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. எனினும் தமிழ் மக்களின் உரிமைகள் இதுவரையில் பெற்றுக் கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். புலிகள் மாற்றுக் கருத்துக்கொண்டோரை படுகொலை செய்வதனையும் சிறுவர்களை படையில் இணைத்துக் கொள்வதனையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

05-03-2009, 02.20PM

 356 பேர் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
 

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் காயமடைந்த நிலையில் காணப்படும் பொதுமக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு கொண்டு வரும் நடவடிக்கையினை மேற்கொண்டு வரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் எட்டாவது தடைவையாக மேலும் 356 பேரை கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வந்துள்ளனர்.

 


 

கிறீன் ஓசன் கப்பலில் நேற்றயதினம் (04.03.2009) இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் பலரும் அடங்குவதாக தெரிவித்துள்ள சங்கத்தின் பேச்சாளர் சரஸி விஜயரட்ண இனிவரும் காலங்களில் காயமடைபவர்களை உடனுக்குடன் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

05-03-2009, 11.02AM

புத்தல கோனங்கார பகுதியில் சோதனைச் சாவடி மீது புலிகள் தாக்குதல்.  சிவில் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி.

 

புத்தல - கதிர்காமம் வீதி கோனகங்கார பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடி மீது புலுpகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சிவில் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
 

நேற்று (04.03.2009) காலை 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இதனையடுத்து குறித்த வீதி சில மணிநேரம் போக்குவரத்துக்கு மூடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவத்தினை அடுத்து இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

05-03-2009, 10.50AM

சிவிலியன்களுடன் வரும் புலி உறுப்பினர்கள் குறித்து படையினர் அவதானத்துடன் உள்ளனர் - உதயநாணயக்கார
 

வன்னியிலிருந்து வரும் மக்களுடன் இணைந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் புலி உறுப்பினர்கள் தொடர்பில் படையினர் மிக அவதானத்துடன் இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.


படையினரிடம் சரணடையும் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அவர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் புலி உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்கு இராணுவப் புலனாய்வுத் துறையினர் அவதானத்துடன் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

05-03-2009, 10.42AM

இரணைமடுக் குளத்திலிருந்து நீரை வழங்க அரசு தீர்மானம்
 

யாழ் குடாநாட்டில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையினை நிவர்த்தி செய்வதற்கு இரணை மடு குளத்திலிருந்து நீரினைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.


இதற்கு 12 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாய் செலவில் புதிய நீர்வினியோக கட்டமைப்பொன்றினை உருவாக்குவதற்கு எண்ணியுள்ளதாக நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன் மூலம் யாழ் குடாநாட்டிலுள்ள 3 இலட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

05-03-2009, 10.32AM

அத்துரகிரிய கொடகெம பகுதியில் மூவர் கைது.
 

அத்துரகிரிய கொடகெம பகுதியில் வெளிநாட்டு பிரஜை ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த மூன்று தமிழர்கள் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவர் பெண்கள் எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர்; மூவரையும் விளக்கமறியலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

 

05-03-2009, 10.21AM

வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழு வவுனியாவிற்கு விஜயம்.
 

வெளிநாட்டு இராஜதந்திரிகளை உள்ளடக்கிய தூதுக்குழு ஒன்று நேற்றயதினம் (04.03.2009) வவுனியாவில் அமைந்துள்ள நலன்புரி முகாங்களுக்கு விஜயம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

அங்கு சென்ற அவர்கள் நலன்புரி முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு அரசாங்கம் செய்து கொடுத்துள்ள வசதிகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் அவர்களின் குறைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதாக தெரியவருகின்றது. வடமாகாண ஆளுநரின் அழைப்பில் வெளிவிவகார அமைச்சின் செயலர் பாலித ஹோகன்ன தலைமையில் சென்ற குழு மாணிக்கம்பண்ணை உள்ளிட்ட பல முகாங்களுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

05-03-2009, 10.15AM

சரத்பொன்சேகா வன்னிப் பிராந்தியத்திற்கு விஜயம்.
 

இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் சரத்பொன்சேகா வன்னிப் பிராந்திய இராணுவக் கட்டளைத் தலைமையகத்திற்கு நேற்று (04.03.2009) விஜயம் மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

 

அங்கு சென்ற அவர் எதிர்காலத்தில் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய தாக்குதல்கள் அதன்போது பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக தெரியவருகின்றது. களமுனையிலுள்ள தளபதிகளை சந்தித்த அவர் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வரும் பொதுமக்களுடன் புலிகளும் இணைந்து வந்து இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தும் அச்சம் காணப்படுவதாகவும் எனவே படையினர் மிக அவதானத்துடன் இதன்போது செயற்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

05-03-2009, 10.07AM

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடாத்தியோர் கைது செய்யப்படுவர் - ஆசிப் அலி சர்தாரி
 

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடாத்தியோர் விரைவில் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களுக்கு தகுந்த தண்டணை வழங்கப்படும் என பாக்கிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உறுதியழித்துள்ளார்.

 


தாக்குதலினை அடுத்து அங்கு விரைந்த வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை சந்தித்த அவர் இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் தென்படுவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலினால் இரு தரப்பின் உறவுகளில் பாதிப்பு ஏற்படாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளதனை தாம் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ள அவர் பயங்கரவாதத்தினை முறியடிப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

05-03-2009, 10.02AM

இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழுவதற்கு அரசாங்கம் தயாரில்லை - ரட்ணசிறி விக்கிரமநாயக்க

 

புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்வதென்பது சாத்தியமற்றது இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழுவதற்கு அரசாங்கம் தயாரில்லை என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.


அவசரகாலச் சட்டத்தினை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிக்கும் பிரேரணையை பாராளுமன்றத்தில் நேற்று (04.03.2009) சமர்ப்பித்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


புலிகள் பலவீனமடையும் சந்தர்ப்பங்களில் யுத்த நிறுத்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. யுத்த நிறுத்தம் செய்யுமாறு பல்வேறு சக்திகளும் அழுத்தங்களை பிரயோகிக்கின்றன. எனினும் யுத்த நிறுத்தம் என்பது சாத்தியமற்றதொன்று என அவர் குறிப்பிட்டுள்ளார். மரண வாசலில் நின்று சமிக்ஞை கொடுக்கும் மக்களை காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர காலச் சட்டத்திற்கு ஆதரவாக 74 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளிம் அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு ஆதரவாக அரசாங்கத்துடன் இணைந்து ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெலஉறுமய என்பன ஆதரவாக வாக்களித்ததுடன் த.தே.கூ ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன எதிராக வாக்களித்திருந்தன.

 

04-03-2009, 08.47AM

முழு இலங்கையையும் பிடிப்பதே பிரபாகரனின் நோக்கம் அதனை அரசு முறியடித்துள்ளது - மைதிரிபால சிறிசேன.
 

எதிர்வரும் இரு வாரங்களில் வடபகுதி முழுவதும் அரச கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும் அதன் பின்னர் அங்கு மீள் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் திறண் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடமே உள்ளது என அமைச்சர் மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முழு இலங்கையையும் அடிமைப்படுத்தி தமிழீழத்தினை உருவாக்குவதே புலிகளின் தலைவர் பிரபாகரனின் நோக்கம் அதனை அரசாங்கம் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (03.03.2009) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் படையினர் பாரிய வெற்றிகளை குவித்துள்ளதன் மட்டுமல்லாது அவர்கள் வசமிருந்த பாரிய ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களை வைத்துப் பார்க்கும் போது பிரபாகரன் வடக்கு கிழக்கு மட்டுமல்ல இலங்கை முழுவதனையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தனிநாடு அமைப்பதற்கே முயன்றுள்ளார் என்பது தெளிவாகின்றது. எனவே இவ்வாறான ஒரு பாரிய அச்சுறுத்தலை எமது அரசாங்கம் முறியடித்துள்ளதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார். 3தசாப்தகாலமாக நாட்டில் குண்டு வெடித்து பொதுச் சொத்துக்களும் அழிக்கப்பட்டு மக்களும் கொல்லப்படும் நிலை காணப்பட்டது. எனினும் படையினரின் அர்ப்பணிப்பு காரணமாக அந்த நிலை மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 

04-03-2009, 08.44AM

மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதனை அடுத்து தமது வீடுகளுக்கு திரும்பமுடியாத மாணவர்களுக்கு மாற்று இருப்பிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி என்.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.


வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் உதவி மேற்பார்வையாளரும் கலை கலாச்சார பீடத்தைச் சேர்ந்த மாணவியொருவரும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதனை அடுத்து எழுந்துள்ள அச்ச நிலை காரணமாக பல்கலைக்கழக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில் பெரும்பாலானோர் மட்டக்களப்பிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே விருப்பம் வெளியி;ட்டோர் மட்டக்களப்பு நகரிலுள்ள பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 69 மாணவர்கள் இங்கு தங்கியுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

 

04-03-2009, 08.42AM

300 குடும்பங்கள் மெனிக்பாம் நலன்புரி முகாமிற்கு மாற்றம்.
 

வவுனியா நகரில் அமைந்துள்ள நலன்புரி முகாமில் தங்கியிருந்த 300 குடும்பங்கள் செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வீடுகளில் நேற்றயதினம் (03.03.2009) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 

வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் காமினி மகா வித்தியாலயம் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி போன்ற முகாங்களில் தங்கியுள்ளவர்களில் ஒரு பகுதியினரே இவ்வாறு மெனிக்பாமிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

04-03-2009, 08.37AM

மட்டு. வெல்லாவெளியில் கிளைமோர் தாக்குதல்.
 

மட்டக்களப்பு வெல்லாவெளிப் பகுதியில் நேற்று (03.03.2009) காலை 10 மணியளவில் புலிகள் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதல் ஒன்றில் விசேட அதிரடிப்படை வீரர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
 

பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிந்தவேளை புலிகள் இந்தத் தாக்குதலினை நடாத்தியிருப்பதாக தெரியவருகின்றது. இந்தச் சம்பவத்தில் எம்.வனபால (வயது 28) டபிள்யூ.கே.கனிஷ்டன் (வயது 27) ஆகிய இரு வீரர்களும் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

04-03-2009, 08.32AM

மோதல் இடம்பெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்களை அழைத்துச் செல்ல முடியாது - லக்ஸ்மன் யாப்பா
 

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்களை அழைத்துச் செல்வதில் சிக்கல் நிலை உள்ளது ஏனெனில் அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அழிப்பது யார் என்ற கேள்வி எழுகின்றது என அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.


உலகில் எங்கும் மோதல் இடம்பெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்படுவதில்லை காஸாவிலும் அவ்வாறுதான் தற்போது மோதல் இடம்பெற்றுவரும் பகுதிகளில் கண்ணிவெடிகள் காணப்படுகின்றன. அவை அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்போது ஊடகவியலாளர்களை அழைத்துச் செல்வது தொடர்பில் ஆராய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மோதல்கள் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறு அறிக்கைகளை விடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தினையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

04-03-2009, 08.27AM

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது - பாலித ஹோகன்ன
 

பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு சார்க் நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்திற்கு மேலதிகமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதை கிரிக்கெட் அணியினர் மீதான பயங்கரவாதத் தாக்குதல் உணர்த்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலர் பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார்.


பாக்கிஸ்தான் தாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் கருத்து வெளியிடும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தின் தன்மை எவ்வளவு என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்பதனை பாக்கிஸ்தானில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் கோடிட்டுக் காட்டுகின்றது. பொருளாதாரம் மற்றும் ஏனைய விடயங்களை தாக்கிய பயங்கரவாதம் தற்போது விளையாட்டுத்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அனைத்துச் சமூகங்களும் கண்டிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

04-03-2009, 08.25AM

இலங்கை  கிரிக்கெட் வீரர்கள் தாய் நாடு திரும்பினர்.
 

பாக்கிஸ்தான் தாகூர் நகரில் தாக்குதலுக்கு இலக்கான இலங்கை கிரிக்கெட் வீரர்களை அழைத்து வருவதற்காக நேற்று மாலை பாக்கிஸ்தான் பயணமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விசேட விமானம் இன்று (04.03.2009) அதிகாலை 5.30 மணியளவில் நாடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

மேலும் இந்தச் சம்பவத்தினை பாக்கிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் அந்நாட்டின் பிரதமர் யூசுப் ரசா கிளானி ஆகியோர் வன்மையாக கண்டித்துள்ளதுடன். ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது கவலையினையும் வெளியிட்டுள்ளனர்.

 

 

இதேவேளை மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ கிரிக்கெட் அணி மீதான தாக்குதலினை அடுத்து ஒரு நாளிலேயே தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த நிலையில் தாய் நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

04-03-2009, 08.21AM

புதுமாத்தளன் பகுதியிலிருந்து 7வது தடைவையாக 163 பேர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

 

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து 7 வது தடைவையாக 163 பேர் சேருவில கப்பலில் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

 


புதுமாத்தளன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வைத்தியசாலையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக அங்கு காயமடைந்துள்ளவர்களை உடனுக்குடன் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவர வேண்டிய தேவையேற்பட்டுள்ளதாக குழுவின் பேச்சாளர் சரஸி விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

 

 

காயமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் பலரும் இந்தக் கப்பலில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு வருவதற்காக ஐ.சி.ஆர்.சி எடுத்த முயற்சியின் காரணமாக இதுவரையில் மொத்தமாக 2278 பேர் திருமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

03-03-2009, 07.52PM

மட்டு. சின்னஉப்போடையில் ஆட்டோ சாரதி சுட்டுக்கொலை.
 

மட்டக்களப்பு சின்னஉப்போடை லூசி மாதா கோவில் வீதியில் இன்று (03.03.2009) முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆட்டோச் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் செல்லத்துரை ரஞ்சித்குமார் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

 

03-03-2009, 07.45PM

மின்சாரசபை சட்டமூலம் 69 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.
 

இலங்கை மின்சாரசபை சட்டமூலம் 69 மேலதிக வாக்குகளினால் இன்று (03.03.2009) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 109 வாக்குகளும் எதிராக 40 வாக்குகளும் கிடைத்துள்ளன.

 

ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் நிகால் கலப்பதி வாக்கெடுப்பை கோரியதனை அடுத்து இந்த வாக்கெடுப்பு இடம்பெறுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜேவிபி என்பன சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

03-03-2009, 07.31PM

புதுக்குடியிருப்பு நகர் இராணுவத்தின் வசம் - தே.பா.ஊ மையம்.

 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் முழுவதனையும் இராணுவத்தின் 58வது படைப்பிரிவு இன்று (03.03.2009) முற்பகல் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

 

இந்தப் பகுதி மீட்கப்பட்டதன் பின்னர் தற்போது புலிகளுடன் இறுதி யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தாம் உள்ளதாக 58வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

 

03-03-2009, 07.20PM

இலங்கை கிரிக்கெட் அணி மீது  தீவிரவாதிகள் தாக்குதல்.
 

பாகிஸ்தானின் தாகூர்நகரில் இலங்கை கிரிட்கெட் அணி மீது இன்று (03.03.2009) காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ஒரு பயிற்சிவிப்பாளர் உட்பட 5 கிரிட்கெட் வீரர்களும் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

 

 

இந்த தாக்குதலினை வன்மையாக கண்டித்துள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ விசேட விமானம் ஒன்றினை அனுப்பி இலங்கை கிரிக்கெட் வீரர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

காயமடைந்தோரில் திலான் சமரவீர தரங்க பத்திரன ஆகியோர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தச் சம்பவத்தில் பாக்கிஸ்தான் பொலிஸார் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

 

03-03-2009, 12.02PM

 ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசிய கொளத்தூர் மணி கைது.
 

தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச் சாட்டின் பெயரில் பெரியார் திராவிடற் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திண்டுக்கல் பொலிஸாரினால் நேற்று (02.03.2009) காலை 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

பெப்ருவரி 26ம் திகதி இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் தெரிவி;த்த கருத்துக்களுக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. தனது தோட்டத்தில் புலிகள் ஆயுதப் பயிற்சி பெறுவதற்கு அனுமதி வழங்கியமை கர்நாடகத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தமை போன்ற காரணங்களுக்காக 5 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

03-03-2009, 08.01AM

தரைமார்க்கமாக பொருட்களை அனுப்ப அரசு தீர்மானம்.
 

யாழ் குடாநாட்டு மக்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் ஏ9 வீதி ஊடாக அனுப்புவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த சேவை நிவாரண அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
 

எதிர்வரும் 9ம் திகதி முதல் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு எண்ணியுள்ளதாக அவர் குறி;ப்பி;ட்டுள்ளார். இதற்கான முடிவினை நேற்று ஜனாதிபதிச் செயலகத்தில் கூடி எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் பொருட்களை கொண்டு செல்வதற்கு 100 லொறிகளைப் பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

03-03-2009, 07.59AM

வவு. மகாரம்பைக்குளத்தில் ஆணின் சடலம் மீட்பு
 

வவுனியா மகாரம்பைக்குளம் பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (02.03.2009) மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் அடையாளம் காணப்பதற்காக அதனை வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

03-03-2009, 07.58AM

வாக்காளர்அட்டை விநியோகப்பணி ஏப்பிரல் 6ம் திகதிஆரம்பம்.
 

மேல் மாகாணசபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் ஏப்பிரல் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஏப்பிரல் 17ம் திகதியுடன் முடிவடையும் எனவும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

 

03-03-2009, 07.55AM

மதுபான உற்பத்தியாளர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு.
 

சட்டவிரோத மதுபான உற்பத்தியினை மேற்கொள்ளும் நபர்களை இனங்கண்டு அவர்களுக்கு மாற்று சுயதொழில் ஊக்குவிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார்.
 

இது தொடர்பாக தனது தலைமையில் கடந்த 26ம் திகதி கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது சட்டவிரோத மது உற்பத்தியினைத் தடுப்பது. இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வழிப்பது போன்றவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் புதிய சமுதாயம் ஒன்றினை உருவாக்க முடியும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மதுவரி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

03-03-2009,  07.53AM

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ நேபாள பிரதமரை சந்திக்கவுள்ளார்.
 

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேபாளம் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ இன்று (03.03.2009) நேபாளப் பிரதமர் பிரசன்னாவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
 

இதன்போது கொழும்பிற்கும் காத்மண்டுவிற்கும் இடையில் நேரடி விமான சேவையினை நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதுடன் ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளார். இதேவேளை நேற்று இரவு அந்நாட்டின் ஜனாதிபதி ராஜ்பரன் ஜாதுவை அவரது மாளிகையில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

 

03-03-2009, 07.50AM

புதுமாத்தளனிலிருந்து மேலும் ஒரு தொகுதி நோயாளர்கள் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
 

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் காயமடைந்திருந்த மேலும் பலர் கிறீன் ஓசன் கப்பல் மூலம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 

 

 

6வது தடைவையாக நேற்று (02.03.2009) இரவு திருமலை கொண்டு வரப்பட்ட இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மொத்தமாக 2280 பேர் இதுவரையில் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
 

02-03-2009, 09.20PM

சுடர்ஒளி ஆசிரியரின் முறைதவறிய கைதை தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டித்துள்ளது.

 

தேசிய தமிழ் தினசரி; சுடர் ஒளி பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் திரு. வித்தியாதரன் அவர்களின் முறை தவறிய கைதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கின்றது பத்திரிக்கையாளர்கள் ஓர் தேசத்தின் காவலர்கள் பல சிரமங்கள் மத்தியில் சில சந்தர்ப்பங்களில் தம் உயிரையும் பணயம் வைத்து சேகரிக்கும் செய்திகளை பொதுமக்களுக்குத் தெரிவிக்கவேண்டிய கடமை அவர்களுக்குணடு.

 

காவல் துறையினர் சமாதானத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் என்ற கோதாவில் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் நிருபர்களுக்கும் பாதுகாப்பும் உதவியும் அளிப்பதோடு அவர்களின் கடமைக்கு எதுவித இடையூறும் செய்யாதிருக்க கடமைப்பட்டவர்களாவர். அவர்கள் எழுதுவது அத்தனையும் எமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் இருப்பினும் உண்மையை வெளிப்படுத்தி பாரபட்சமற்ற செய்திகளை பிரசுரிப்பது வரவேற்கதக்கதாகும். பத்திரிக்கை ஆசிரியர் தான் சேகரிக்கும் செய்தி வந்த வழி பற்றிய இரகசியத்தை காப்பற்றவேண்டிய கடமை உண்டு என்பதை நாம் மறக்கக்கூடாது.

பாரபட்சமின்றி கடமைபுரிய வேண்டிய கடமைப்பாடு காவல்துறை அதிகாரிகளுக்குண்டு. சமாதானத்தை நிலைநாட்டும் அதிகாரிகளாகிய காவற்துறையினர் அனைவரையும் சமமாகவும் அனைவரையும் அக்கறையுடனும் கண்ணியமாகவும் நடத்தவேண்டிய பொறுப்பு உடையவர்களாவர். அவர்கள் சில சந்தர்ப்பங்களில் எதிர்நோக்கும் உயிர் ஆபத்தைப்பற்றியும் அவர்களுக்கு ஏற்படும் சங்கடமான நிலைமைகள் பற்றியும் நாம் அறியாததல்ல. அண்மையில் கிடைத்த ஓர் இந்திய செய்திப்படி ஏதோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சில வழக்கறிஞர்கள்; காவல் துறையைச் சேர்ந்த ஒருவரை தாக்கியும் ஒரு சவர அலகால் பல இடங்களில் காயமும் ஏற்படுத்தியதால் ஏற்பட்ட சங்கட நிலையையும் அவமானத்தையும் தாங்கமுடியாது தீக்குளித்துள்ளாh.

 

ஒருவர் எவ்வளவு மோசமான குற்றவாளியாக இருந்தாலும்கூட திரு. வித்தியாதரனுக்கு ஏற்பட்டதுபோன்ற நிலைமை இனிமேல்; வேறு ஒருவருக்கு ஏற்படக்கூடாது. திரு. வித்தியாதரன் ஓர் கணவான் மட்டுமல்ல ஓர் தேசிய தமிழ் தினசரியின் பிரதம ஆசிரியரும்கூட. அவர் தான் கைது செய்யப்படுவதை வலிந்து தடுத்திருந்தாலோ அல்லது தப்பிச்செல்ல முயற்சித்திருந்தாலோ சிறிதளவு பலாத்காரம் உபயோகித்திருக்கலாம் என்று கூட கூறலாம.; ஆனால் இச்சந்தர்ப்பத்தில் திரு வித்தியாதரன் தன் காரியாலயத்தில் பெருமளவு நேரத்தை செலவிடுபவர். ஓர் தொலைபேசி அழைப்பு மூலம் அவரை வரவழைத்திருந்தால் அவர் அழைப்பிற்கமைய செயற்பட்டிருப்பார். அந்த அசிங்கமான முறையில் நடத்தப்பட்டது வெட்கப்படவேண்டிய விடயமாகும். எமது நாட்டு காவல் துறையினர் ஓர் பத்திரிக்கை ஆசிரியரை இம்முறையில் நடத்தியிருப்பார்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. இலங்கை காவல் துறையினருக்கு இந்தளவு ஓர் அவமானத்தை ஏற்படுத்த எவரையும் அனுமதிக்கமுடியாது. சம்மந்தப்பட்டவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவ்வதிகாரிகளுக்கு அவர் தனது நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்துகொண்டிருந்த வேளை இவ்வாறு நடந்திருந்தால் இத்தகைய கைதை அவரால் நியாயப்படுத்தவேமுடியாது. தனது இறுதி யாத்திரைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு ஆத்மாவிற்கு இழைக்கப்பட்ட பெரும் அவமானமாகவே அவரின் உறவினர்கள் கருதுகின்றார்கள். அது நியாயமானதாகவே எனக்கும் தோன்றுகின்றது.

 

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- தமிழர் விடுதலைக் கூட்டணி

 

02-03-2009, 05.05PM

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நேபாளம் சென்றடைந்துள்ளார்.


உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு முதற்தடவையாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ இன்று (02.03.2009) நேபாளத்திற்கு சென்றுள்ளார். இந்த விஜயத்தின்போது நேபாள ஜனாதிபதி ஜாம்பரன் ஜாதேவ் பிரதம மந்திரி புஸ்பகமால் தாவ் மற்றும் நேபாள அரசின் பல உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்வுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒன்றினைந்து பயங்கரவாதத்தினை முறியடிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விஜயத்தின்போது ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ரோகித போகல்லாகம ஜி.எல்.பீரிஸ் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் சென்றுள்ளனர்.

 

02-03-2009, 04.27PM

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முயன்ற மூவர் கைது.
 

இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயன்ற மூவர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பாம்பன் குந்துக்கால் பகுதிக்கு அண்மையில் வந்திறங்கிய அகதிகளுடன் இணைந்து இவர்களும் வந்திறங்கியுள்ளனர். பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் வசமிருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

 

02-03-2009, 04.12PM

பாராளுமன்ற உறுப்பினர் முரளிதரன் தலைமையில் அம்பாறையில் அபிவிருத்திக் கூட்டம்.
 

அம்பாறை திருக்கோவில் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் சில அபிவிருத்தித்திட்டங்களை இன்று (02.03.2009) ஆரம்பித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

அவர் அம்பாறையில் இடம்பெறவுள்ள அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்றிலும் கலந்து கொள்வார் என அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் இனியபாரதி தெரிவித்துள்ளார்.

 

02-03-2009, 03.48PM

புலிகளின் 400 வாகனங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர்.
 

புதுக்குடியிருப்பில் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள பகுதிகளிலிருந்து புலிகளினால் விட்டுச் செல்லப்பட்ட வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் என்பனவற்றினை படையினர் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 

கடந்த 10 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 400 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை புலிகளின் மாவீரர் கிராமம் இராணுவத்தினர் வசம் வந்துள்ளது எனவும் அதில் சூசையின் 5வயது மகனின் கல்லை நவீன முறையில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளனர்.

 

02-03-2009, 03.34PM

சிலாபத்தில் 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது.
 

சிலாபம் பகுதியில் நேற்று (01.03.2009) இரவு பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலின்போது 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார்.
 

இவர்களில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த 5 பேர் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 3 மேலும் குறித்த பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களை இன்று சிலாபம் நீதிமன்றத்தில் ஆயர் செய்யப்படவுள்ளனர்.

 

02-03-2009 , 03.21PM

மின்சாரசபைசட்டமூலத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

 

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள மின்சாரசபை சட்டமூலத்திற்கு எதிராக இன்று (02.03.2009) நாடு பூராகவும் கறுப்புக்கொடி போராட்டம் இடம்பெற்றுள்ளதுடன் மாலை கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றுள்ளது.

 

 

இதனை மீறி அரசாங்கம் சட்டமூலத்தினை நிறைவேற்றுமானால் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என துறைமுக புகையிரத எரிபொருள் மற்றும் மின்சார சபை ஊழியர் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி எச்சரித்துள்ளது.

 

நாட்டை மட்டும் பாதுகாத்து பயனில்லை. நாட்டிலுள்ள அரசாங்கங்கள் செய்யும் தேசத்துரோக செயல்களுக்காகவும் நாம் குரல்கொடுக்க வேண்டும் மின்சாரசபையை விற்று நாட்டை இருளில் மூழ்கடிக்க அரசாங்கம் சட்டமூலத்தை கொண்டு வருவதாக தொழிற்ச்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளது. நிப்போன் ஹோட்டலில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றி தொழிற்சங்க கூட்டணியின் பிரதான ஏற்பாட்டாளர் சுமதிபாலமானவடு இவ்வாறு தெரிவி;த்துள்ளார்.

 

02-03-2009, 06.30AM

புலிகளின் பகுதிகளில் உள்ள மக்கள் ஆபத்தான நிலையில் உள்ளதான கூற்றை ஏற்கின்றோம் - பாலித ஹோகன்ன
 

புலிகளின் கட்டுப்பாட்டில் பிடியுண்டுள்ள மக்கள் சிக்கலை எதிர்கொள்கின்றனர் என ஐ.நா பிரதி செயலாளர் நாயகம் ஜோன்ஸ் ஹோம்ஸ் தெரிவித்துள்ள கூற்றினை ஏற்றுக் கொள்கின்றோம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹொகன்ன தெரிவித்துள்ளார்.


புலிகள் வசமுள்ள பகுதிகளை அழித்து அதனை மீட்கும் பலம் இராணுவத்திடம் உள்ளது எனினும் அங்குள்ள மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அதனை மேற்கொள்ளாது காலம் தாழ்த்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றச் சாட்டுக்களை அவர் முன்வைக்கவில்லை மாறாக புலிகளின் பகுதிகளில் உள்ள மக்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவே தெரிவித்துள்ளார். அதனை அவர் இலங்கையில் வைத்தே தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நடைபெறும் பகுதிகளில் பொதுமக்கள் இருந்தால் பாதிப்பு ஏற்படுவது வழமை எனினும் பெரும்பாலும் அதனைத் தடுப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

02-03-2009, 06.14AM

மேலும் 282 பேர் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

 

முல்லைத்தீவில் காயமடைந்த நிலையில் இருந்த மேலும் 282 பேர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஏற்கனவே 1996 பேர் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் 6வது தடைவையாக இந்த 282 பேரும் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதன் காரணமாக திருகோணமலை வைத்தியசாலையில் இடநெருக்கடி நிலவுவதாவும் அதனை நீக்குவதற்கு சுகாதார அமைச்சு துரித நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது. அதிகமாகவுள்ள நோயாளர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


40 மெற்றித்தொன் உணவுப் பொருட்களுடன் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதிக்கு சென்ற கிறீன் ஓசன் கப்பல் அதனை இறக்கியதன் பின்னர் அங்கிருந்து நோயாளர்களை அழைத்து வந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரஸிவிஜரட்ண தெரிவித்துள்ளார்.

 

02-03-2009, 06.10AM

இந்தியர் எமக்கு பாதகமாக செயற்படாது என்பது எமக்கு உள்ளார்ந்த ரீதியாக தெரியும் - லக்ஸ்மன் யாப்பா.
 

தமிழ் நாட்டின் அழுத்தம் காரணமாக இந்திய மத்திய அரசு சில கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது எனினும் இந்திய எமக்கு பாதகமாக செயற்படாது என்பது எமக்கு உள்ளார்ந்த ரீதியாக தெரியும் என அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
 

ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையும் வரையில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே .இடமில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் தமிழ் மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டே இராணுவ நடவடிக்கையின் வேகத்தினை குறைத்துள்ளோம். இந்த காலப்பகுதியைப் பயன்படுத்தி பெருமளவான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.


ஐரோப்பிய ஒன்றியம் உள்ளி;ட்ட சர்வதேச அமைப்புக்களின் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தம் செய்வதற்கு புலிகள் சம்மதம் வெளியிட்டனர் அதனை நாம் வரவேற்கின்றோம் எனினும் அதனுடன் ஆயுதங்களையும் ஒப்படைக்கின்றோம் என புலிகள் அறிவித்திருந்தால் நாம் மேலும் சந்தோசமடைந்திருப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

01-03-2009, 05.40PM

ஏ9 பாதையூடாக இராணுவத்தினர் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.
 

 

இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஏ9 பாதை இன்று (01.03.2009) முதல் பாதுகாப்பு படையினரின் போக்குவரத்திற்கான திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

 


 

யாழ் குடாநாட்டிலுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை இப்பாதையின் ஊடாக அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இராணுவத்தினர் பயணிக்க ஆரம்பித்துள்ள இவ்வீதியூடாக விரைவில் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

01-03-2009, 5.13PM

புதுமாத்தளன் பகுதிக்கு 90 மெற்றித் தொன் அனுப்பி வைப்பு.
 

அரச கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் வந்துள்ள மக்களுக்கு தேவையான 90 மெற்றித் தொன் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக அத்;தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி.திவாரட்ண தெரிவித்துள்ளார்.
 

(01.03.2009) கிறீன் ஓசன் கப்பல் மூலம் 50 மெற்றித்தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு பால்மா பைக்கற்றுக்கள் கிடைப்பதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் 1000 பால்மா பைக்கற்றுக்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

01-03-2009,  04.25PM

நலன்புரிமுகாம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்.
 

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் இடம்பெற்ற தீ விபத்திற்கான காரணம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதும் விசாரணை தொடர்வதாக அவர்கள் தெரிவித்துள்ளார்.

 


இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமைத்த உணவினை வழங்கிவருவதாக மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட்பதியுதீன் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

01-03-2009, 04.21PM

வித்தியாதரனிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை.
 

சுடர்ஒளி மற்றும் உதயன் பத்திரிக்கையின் ஆசிரியரும் பொதுமுகாமையாளருமான என் வித்தியாதரனிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.ரஞ்சித்குணசேகர தெரிவித்துள்ளார்.

 

கடந்த 20ம் திகதி புலிகள் கொழும்பில் மேற்கொண்ட வான் தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வித்தியாதரனை விடுவிப்பதற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகளின் உதவியினை நாடியுள்ளதாக உதயன் மற்றும் சுடர்ஒளி பத்திரிக்கையின் முகாமைத்துவப் பணிப்பாளர் இ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

 

01-03-2009, 04.10PM

தேர்தல் சட்டங்களை மீறும் சட்டவிரோத போஸ்டல்கள் பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளது.
 

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டல்கள் மற்றும் பதாதைகள் என்பனவற்றினை அகற்றுவதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு அமைய மொரட்டுவ, தெஹிவளை, கல்கிசை, றாகிதாவத்தை ஆகிய பகுதிகளில் நேற்றதினம் பொலிஸார் போஸ்டல்களை அகற்றியுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை நேற்றயதினம் இரவு மீண்டும் குறித்த பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையும் அகற்றுவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

01-03-2009, 12.25PM

புலி ஆதரவுக்குரல் எழுப்பிய சீமானுக்கு சிறைத்தண்டணை
 

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும் பேசிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இயக்குனர் சீமானை சிறையில் அடைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

புதுச்சேரியில் மாணவர்கள் உண்ணாவிரம் இருந்தபோது அதில் கலந்துகொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டார் என அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்தரவிற்கு அமைய அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

01-03-2009, 12.20PM

யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை -  போகல்லாகம
 

புலிகள் அமைப்பு ஆயுதங்களை கீழே போட்டால் அன்றி யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.
 

சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் வெளிவிவகார அமைச்சர்களின் 31வது மாநாடு நேற்று மாலை நிறைவடைந்ததனை அடுத்து அதன் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு கொழும்பு இன்ட்கொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
 

கடந்த மாதம் 32 ஆயிரம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து தப்பி வந்துள்ளனர். புலிகளிடமிருந்து தப்பி வரும் மக்களை பாதுகாப்பதற்கு அரச படைகளும் அரசாங்கமும் தயாராவுள்ளன. அவர்கள் வருவதற்கான பாதை எந்த நேரத்திலும் திறந்தே உள்ளது. நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சார்க் நாடுகள் ஒன்றினைந்து நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளன. குறிப்பாக பயங்கரவாதத்தினை ஒழிப்பதில் நாம் அனைவரும் கூட்டாக செயற்படப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

01-03-2009, 12.15PM

பாரர்ளுமன்ற உறுப்பினர் கனகரட்ணத்தின் பிரத்தியேக செயலாளர் செல்லத்துரை சபாநாதன் கடத்தப்பட்டுள்ளார்.
 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினர் கனகரட்ணத்தின் பிரத்தியேக செயலாளர் செல்லத்துரை சபாநாதன் வவுனியா வைரவர்புளியங்குளத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
 

நேற்றயதினம் பிற்பகல் 3.30 மணியளவில் அவர் வீட்டிலிருந்த வேளை அங்கு சென்ற ஆயுததாரிகள் பலவந்தமாக அவரை இழுத்துச் சென்றதாக மனைவி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் கடந்த பல மாதங்களாக முல்லைத்தீவில் தங்கியுள்ளார். அவருக்கு நாடாளுமன்றத்தில் 3மாத கால விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 

01-03-2009 , 12.13PM

கறுப்புக்கொடி காட்ட முயன்ற வைகோ பொலிஸாரினால் கைது.
 

தூத்துக்குடிக்கு விஜயம் செய்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜிக்கு கறுப்புக்கொடி காட்ட ஊர்வலமாக சென்ற வை கோபாலசாமி பொலிஸாரினால் நேற்று (28.02.2009) கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் ஊர்வலமாக சென்ற ம.தி.மு.க தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

01-03-2009,  12.10PM

புதுமாத்தளன் வைத்தியசாலையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு -  டாக்டர் சத்தியமூர்த்தி

 

முல்லைத்தீவு புதுமாத்தளன் வைத்தியசாலையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக குறுகிய காலப் பகுதியினுள் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் இந்த நிலை நீடித்தால் அங்கு மேலும் பலர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அரசாங்கம் தேவையான மருந்துப் பொருட்களை அங்கு அனுப்ப வேண்டும் அவ்வாறு இல்லாது போகும் பட்சத்தில் மேலும் காயமடைபவர்களை காப்பாற்ற முடியாது நிலை ஏற்படும் என தற்போது அங்கு கடமையாற்றிவரும் வைத்திய அதிகாரி டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

வன்னியில் உணவுத்தட்டுப்பாட்டைப் போல் தற்போது மருந்துத் தட்டுப்பாடும் நிலவுகின்றது. பல சிறுவர் சிறுமியர் போசாக்கு பற்றாக்குறை காரணமாக மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சேலனை ஏற்றுவதற்கு கூட அங்கு சேலன் இல்லை எனத் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் தங்கியுள்ளவர்களுக்கான போதிய மலசல கூடம் இல்லை. மலசலகூடம் இரண்டு உள்ளபோதும் அதற்கு தேவையான நீர் இல்லை இவற்றிற்கு மத்தியில் அங்கு தொற்றுநோய் அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

01-03-2009, 12.02PM

மருத்துவர்கள்குழுவொன்றினை அனுப்ப இந்தியா தீர்மானம்
 

இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக அவசர மருந்துவப் பொருட்களையும் மருத்துவர் குழுவொன்றினையும் அனுப்புவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப்முகர்ஜி தெரிவித்துள்ளார்.
 

இதனைப் பயன்படுத்தி இடம்பெயர்ந்தோர் மருத்துவமனை ஒன்றினை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரணாப்முகர்ஜி புலிகளின் யுத்த நிறுத்தக் கோரிக்கை ஆயுதங்களை கீழே வைக்கும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக அமையாதபோதும் வன்னியில் சிக்குண்டுள்ள மக்கள் வெளியேறுவதற்காக இரு தரப்பினரும் யுத்த நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு புலிகள் அனுமதிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிகள்

 

தேர்தல் திணைக்களத்தால்

03 ஜுலை 2008 இல் வெளியிடப்பட்டது

 

 

 

 

அவுஸ்;திரேலியாவில வெளிவரும் உதயம் மாத இதழில் வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப்பெருமாள் அவ

ர்கள் எழுதிய 13வது அரசியல் யாப்பு திருத்தம், அதன் அமுலாக்கம் குறித்த கட்டுரை தொடர்
 

 

கூட்டமைப்பு

 

01 ஆகஸ்ட் 2008
த.வி.கூ புளொட்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
 


அறிக்கைகள்

 

01 மே 2007
ஈ.பி.ஆர்.எல்.எவ்

 


கட்சியின் விளக்கம்

 

10 நவம்பர் 2006
இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு தொடர்பாக எமது கட்சியின் விளக்கம்
 

இணைத்தலைமை
 

22 நவம்பர் 2006
 


ஜெனீவா பேச்சுவார்த்தை
 


மத நிறுவனங்கள்

 

08 ஏப்ரல் 2007
 


 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரேரணைகள்
 

Proposal for the Political Solution to the Ethnic Conflict in Srilanka
EPRLF seeks merger of Sri Lanka's north-east Indo-Asian News Service 30 March 2007

Indian backing proposals styled on the Indo-Lanka Accord The Island, March 26, 2007  

Moderate Tamils' constitutional proposal  Hindustan Times 23 March 2007

FRATERNAL PAGE

LSSP demands 13th Amendment be implemented
 

 

தோழர் றொபேட்
50வது பிறந்தநாள் நினைவு
 

மார்கழி 13
ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல்
khh;fop 13

<gpMh;vy;vt; kPJ jhf;Fjy;

 

Appeal to the leaders of  Political Parties and the People of  Tamil Naad 14 October 2008

 

 

 

மட்டக்களப்பு மாவட்ட உள்ள+ராட்சி தேர்தல்கள்- 2008
 

வாக்களிப்பு மற்றும் கட்சிகளுக்குக் கிடைத்த ஆசனங்கள்
 

மட்டக்களப்பு மாநகர மேயர் பத்மினி 13.03.2008 அன்று அளித்த செவ்வி
 

 

கிழக்கு மாகாணசபை தேர்தல் ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன் வழங்கிய (14.03.2008) செவ்வி

 

 

 
     
 

 'ehk; kf;fSf;fhfg; NghuhLtnjd;gJ vk;kPJ Rkj;jg;gl;l flikNa jtpu vkf;F toq;fg;gl;l mjpfhuky;y"  Njhoh; f.gj;kehgh